அஜித் சினிமாவிற்கு வந்து 33 வருடங்கள் ஆனதை ஒட்டி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். உங்களால் தான் திரைத்துறையில் நான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன் என்று வெகுவாக மக்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
எந்த ஒரு சினிமா பின்புலன்கள் இல்லாமல் ஹீரோவாக உருவாகியவர் அஜித். ஆனால் அவருக்கும் ஆரம்பப் படிக்கட்டுகளாக சினிமாவில் ஏற்றிவிட்டது நடிகரும் பாடகருமான எஸ் பி பாலசுப்பிரமணியம் தான். அஜித் எஸ்பிபிக்கு எப்படியோ அறிமுகமாகியுள்ளார். இருவருக்கும் இடையே நட்பு இருந்துள்ளது.
அஜித் முதல் முதலாக “பிரேம புஸ்தகம்” என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். அந்தப் படத்தின் இயக்குனர் கோலப்பொடி ஸ்ரீநிவாஸ். இவரும் எஸ் பி பாலசுப்பிரமணியம் நெருங்கிய நண்பர்கள். எஸ்பிபி தான் இந்த படத்திற்கு அஜித்தை ஹீரோவாக சிபாரிசு செய்துள்ளார்.
அதைப்போல் அமராவதி படத்திற்கும் இயக்குனர் செல்வா வேறொரு ஹீரோவைத்தான் ஆரம்பத்தில் தேர்ந்தெடுத்துள்ளார். ஆனால் அங்கேயும் எஸ் பி பாலசுப்பிரமணியம் தான் செல்வாவிடம் அஜித்தை சிபாரிசு செய்துள்ளார். இப்படி இரண்டாவது முறையாகவும் அஜித்தை தூக்கி விட்டுள்ளார்.
அஜித், ஆசை படத்தில் நடிப்பதற்கும் எஸ்பிபி தான் காரணமாய் இருந்துள்ளார். இயக்குனர் வசந்த் இயக்கிய இந்த படத்திற்கு ஆரம்பத்தில் எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ் பி பி சரண் தான் ஹீரோவாக கமிட் ஆகியுள்ளார். ஆனால் அந்த நேரத்தில் சரணுக்கு திருமணம் நடக்க இருந்தது. இதனால் அந்த படத்திற்கும் அஜித்தை சிபாரிசு செய்துள்ளார். இப்படி மும்முறை அஜித் வளர்வதற்கு ஆரம்பத்தில் படிக்கட்டுகளாய் இருந்துள்ளார்.