Cinema : இந்த உலகம் சினிமா மாயை என்று சொல்லிற்கேற்ப தற்போது திரைப்படம் எது வந்தாலும் சரி விமர்சனங்களும் குறைவதே இல்லை. எதிர்மறையான விமர்சனங்களை அதிகம் தென்படுகிறது.
பூஜா ஹெக்டே :
மும்பையில் பிறந்த வளர்ந்த நடிகை பூஜா ஹெக்டே ஆரம்ப காலகட்டங்களில் மாடலிங் செய்து வந்தார். “Miss universe India” போட்டியில் இரண்டாம் இடத்தை தட்டி சென்றார். இதுதான் இவரின் தொடக்கம். பல விளம்பரங்களில் அயராது நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
திரைப் பயணக்கனவு!
திடீரென தமிழ் சினிமா புது முகத்தை நடிக்க வைக்க நினைத்து பூஜா ஹெக்டேவை தேர்வு செய்தனர். 2012ல் முகமூடி என்ற திரைப்படத்தில் ஜீவாவுடன் ஜோடி போட்டு கதாநாயகியாக வலம் வந்தார். கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் மூலம் தமிழில் கால் பதித்தார்.
தமிழ் சினிமாவை தொடர்ந்து, ஓக லைலா கோசம், முகுந்தா ஆகிய படங்களில் நடித்து டோலிவுட்டில் தனக்கென்ற இடத்தை தக்க வைத்துக் கொண்டார் பூஜா ஹெக்டே. அதன்பின் அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு, ராம்சரண் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து மேலும் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தார்.
பாலிவுட்டில் ஹ்ருத்திக் ரோஷனுடன் 2016-இல் Mohenjo Daro என்ற திரைப்படத்தில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்திய பூஜா ஹெக்டேக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழ் சினிமாவில் நெல்சன் இயக்கத்தில் விஜயுடன் சேர்ந்து பீஸ்ட் திரைப்படத்தில் நடித்த பூஜாவுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் மௌஸ் மிகவும் கூடியது.
பூஜாவை விட இவங்க பெஸ்ட்..
சூர்யாவுடன் ரெட்ரோ திரைப்படத்திற்குப் பிறகு, பூஜா ஹெக்டே தற்போது கூலி திரைப்படத்தில் வரும் மோனிகா என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியில் உள்ளனர். சூர்யாவின் டெட்ரோ படத்தில் குடும்ப குத்து விளக்காக நடித்த பூஜா ஹெக்டேவா இது? இந்நிலையின் பூஜா ஹெக்டேவின் ஆட்டத்தை விட மலையாள நடிகர் சௌபின் சாகிர் டான்ஸ் தான் வேற லெவல் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.