Chinmayi : தமிழ் சினிமாவில் பாடகி என்றால் தற்போது அனைவர்க்கும் நினைவில் வரும் பெயர்களில் ஒன்று சின்மயி. இவர் காந்த குரலால் அனைவரையும் கட்டி போட்டுள்ளார். இவர் சிறந்த பாடகி என்று கூறுவதா? துணிச்சலான பெண் என்று கூறுவதா? தெரியவில்லை.
பாடகியாக மட்டும் இவர் அனைவர் மனதையும் கவரவில்லை. எதையும் எதிர்த்து கேள்வி கேட்கும் பெண்ணாகவும், பெண்களுக்கு முன்னோடியாகவும் திகழ்கிறார். இவர் பிரபல பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் குற்றசாட்டுகளை முன்வைத்து எதிர்த்து நின்றார்.
அரசியலுக்கு வரும் சின்மயி..
இதனால் சில அவமானங்களை இவர் சந்திருந்தாலும் எதற்காகவும் சின்மயி இன்றுவரை அதிலிருந்து பின்வாங்கவில்லை. இதனால் தமிழ் சினிமாவில் பாடும் வாய்ப்பையும் இழந்தார்.
ஆனால் தற்போது வெளியாகிய “thug life”படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடல் மூலம் மீண்டும் பிரபலமாக்கப்பட்டார் சின்மயி. தற்போது இவர் பணி நிரந்தரம் கோரி, 6ஆவது நாளாக நடந்து வரும் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டு அவர்களை நேரில் சந்தித்து, அவர்கள் குறைகளை கேட்டு, அவர்களுக்கு 500 தண்ணீர் பாட்டில்களையும் வழங்கியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் இவர் அரசியலுக்கு வரப்போவதாகவும் செய்திகள் கசிந்து வருகின்றன. எதற்கும் அஞ்சாத இந்த “சிங்கப்பெண் சின்மயி”யை பிஜேபி கட்சி குறிவைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.
இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் சின்மயி அறிவிக்கவில்லை. அப்படியே அரசியலுக்கு வந்தால் எந்த கட்சியில் சேரப்போகிறார் என்று எதிர்பார்ப்புகள் எழுந்து வருகின்றன. பொறுத்திருந்து பார்க்கலாம்.