Coolie: லோகேஷ், ரஜினி கூட்டணியில் உருவாகி இருக்கும் கூலி ஆகஸ்ட் 14 வெளியாகிறது. சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இப்படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் தற்போது வெளியாகி உள்ளது.
பூஜா ஹெக்டே கலக்கலாக ஆட்டம் போட்டுள்ள இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது. மோனிகா என தொடங்கும் இந்த பாடலில் சிவப்பு நிற உடை அணிந்து அவர் குத்தாட்டம் போட்டுள்ளார்.
ஜெயிலர் படத்தில் எப்படி தமன்னா ஒரு பாடலுக்கு வந்து தமிழ்நாட்டையே கலங்கடித்தாரோ அப்படித்தான் இந்த பாடலும் உருவாகி இருக்கிறது. பூஜாவின் எனர்ஜியும் வேற லெவலில் இருக்கிறது.
கூலி செகண்ட் சிங்கிள் வேட்டையன் சர்ப்ரைஸ்
ஆனால் அவருக்கு ஈடு கொடுக்கும் வகையில் மஞ்சுமல் பாய்ஸ் நடிகர் சௌபின் கலக்கலாக ஆட்டம் போட்டுள்ளார். அவருடைய அனல் பறக்கும் ஆட்டம் தான் இப்போது எல்லோரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.
அதேபோல் அனிருத் இசை வெறித்தனமாக இருக்கிறது என ரசிகர்கள் ஃபயர் விட்டு கொண்டாடி வருகின்றனர். இப்படி அனைவரையும் கவர்ந்துள்ள இந்த பாடலில் நாம் எதிர்பார்க்காத ஒரு சர்ப்ரைஸ் இருக்கிறது.
அதாவது சந்திரமுகி படத்தில் வேட்டையன் சொல்லும் லகலக வாய்ஸ் இதில் இடம் பெற்றுள்ளது. ஏற்கனவே தளபதி படத்தில் வரும் ஒரு காட்சி இதில் அப்படியே ரீ கிரியேட் செய்யப்பட்டிருக்கிறது.
அந்த வீடியோவும் பயங்கர ட்ரெண்டானது. அதையடுத்து வேட்டையன் சர்ப்ரைஸ் ரஜினி ரசிகர்களை குஷிபடுத்தியிருக்கிறது. அது மட்டுமின்றி இந்த மோனிகா பாடல் தான் இனி இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் லிஸ்டில் வரும் என்பதில் சந்தேகம் இல்லை.