தனுஷுக்காக ரெடியாகும் ஸ்பெஷல் கதை.. பூஜையுடன் தொடங்கும் D54

Dhanush: குபேரா படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் இட்லி கடை அக்டோபர் மாதம் வெளிவர இருக்கிறது. அதன் சூட்டிங் ஒரு பக்கம் நடந்து வருகிறது. அதேபோல் ஹிந்தி படத்திலும் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.

மற்றொரு பக்கம் அடுத்தடுத்த படங்களை கமிட் செய்து வருகிறார். அதில் போர் தொழில் இயக்குனர் விக்னேஷ் ராஜாவுடன் தனுஷ் இணையும் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

ஐசரி கணேஷ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இளம் நாயகி மமிதா பைஜூ தான் படத்தின் ஹீரோயின். இதன் பூஜை நாளை நடைபெறுகிறது.

வரும் 14ம் தேதி படத்தின் சூட்டிங் தொடங்குகிறது. அதேபோல் இப்படம் காதல் சம்பந்தப்பட்ட கதை கிடையாது. மேலும் டூயட், பில்டப் என கமர்சியல் படமாக இது இருக்காது.

பூஜையுடன் தொடங்கும் D54

போர் தொழில் எப்படி இருந்ததோ அதேபோல் எதார்த்தம் விறுவிறுப்பு த்ரில்லர் கலந்த கதையாக இருக்கும் என்ற ஒரு தகவல் தற்போது கசிந்துள்ளது. அதிலும் தனுஷுக்கு இது ஸ்பெஷல் கதையாக இருக்கும் என்கின்றனர்.

இதன் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு நாளை பூஜை முடிந்ததும் தயாரிப்பு நிறுவனம் அறிவிக்க இருக்கிறது. அதை ஆவலுடன் எதிர்பார்த்து வரும் தனுஷ் ரசிகர்கள் இந்த தகவலை இப்போது டிரெண்ட்செய்து வருகின்றனர்.