நயன்தாராவுக்கு மட்டும் நோ.. சிம்புவுக்கு பிறகு தனுஷ் கொடுத்த NOC

Dhanush : தனுஷை பற்றி தொடர்ந்து நெகடிவ் செய்திகள் பரவி வருவது வழக்கமாக இருக்கிறது. பிரபலங்கள் யார் விவாகரத்து பெற்றாலும் முதலில் தனுஷின் பெயர் அடிபட்டு விடுகிறது. இந்த விமர்சனங்கள் தன்னை எதுவும் செய்து விடாது என குபேரா பட நிகழ்ச்சியில் தனுஷ் பேசியது இணையத்தில் வைரலானது.

இதை அடுத்து நயன்தாரா மீதுள்ள வெறுப்பின் காரணமாக தான் தனுஷ் இவ்வாறு பேசி உள்ளார் என்று கூறப்பட்டது. மேலும் விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமண வீடியோவை நெட்பிளிக்ஸ் வாங்கி இருந்தது. அதில் நானும் ரவுடி தான் படத்தில் இடம்பெற்ற பாடல் ஒலிக்கப்பட்டது.

தன்னுடைய அனுமதி இல்லாமல் இந்த பாடல் பயன்படுத்தப்பட்டதாக தனுஷ் 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு இருந்தார். ஏனென்றால் நயன்தாரா தன்னுடைய திருமண வீடியோவை 20 கோடிக்கு நெட்பிளிக்ஸுக்கு விற்று இருந்தார். மேலும் நயன்தாரா தனுஷ் இடையே மனகசப்பு காரணமாக என்ஓசி கேட்டிருந்தார்.

யூடியூப் பிரபலத்திற்கு என்ஒசி கொடுத்த தனுஷ்

ஆனால் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வருகிறார். இதில் தனுஷின் வர்டர்பா ஸ்டுடியோஸ் தயாரித்த வடசென்னை படத்தின் தொடர்ச்சியான காட்சிகள் வர இருக்கிறது. இதனால் எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்காமல் தனுஷ் என்ஒசி கொடுத்துவிட்டார்.

சிம்புவை தொடர்ந்து விஜே சித்துவிற்கும் இப்போது என்ஓசி கொடுத்திருக்கிறார் தனுஷ். விஜே சித்து இப்போது கதாநாயகனாக டயக்ராம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இன்ட்ரோ பாடல் தனுஷின் வேலையில்லா பட்டதாரி படத்தில் இடம்பெற்ற பாடல் வர இருக்கிறது.

ஆகையால் எந்த ஒரு தொகையும் கேட்காமல் விஜே சித்துவுக்காக என்ஓசி கொடுத்திருக்கிறார் தனுஷ். ஆகையால் நயன்தாராவுக்கு மட்டும் நோ சொன்னு தனுஷ் வளர்ந்து வரும் பலருக்கு இலவசமாகாவே தனது படத்தில் இடம்பெற்ற பாடல்கள் மற்றும் காட்சிகளை பயன்படுத்த அனுமதி கொடுத்து வருகிறார்.