ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் பிரம்மாண்டத்தை கொண்டு வந்ததே இயக்குனர் ஷங்கர்தான். அந்த அளவிற்கு இவர் படங்கள் தரமாய் இருக்கும். அசால்டாக பெரிய பட்ஜெட் படங்களை இயக்கி வெற்றியடையும் இயக்குனராக வலம் வந்த ஷங்கர், தயாரிக்கும் ஆசையில் இறங்கி 5 படங்களால் சம்பாதித்த சொத்தை எல்லாம் கரைத்தார். அந்த ஐந்து படங்களின் விவரம் இதோ,
அறை எண் 305 இல் கடவுள்: இயக்குனர் சிம்பு தேவன் இயக்கிய படம் 23ஆம் புலிகேசி. சக்க போடு போட்ட இந்த படத்தை நம்பி அவரிடம் ஷங்கர் ஒப்படைத்த படம்தான் அறை எண் 305 இல் கடவுள்.இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் மோசமான அடி வாங்கி அவரை பாதாளத்தில் தள்ளியது.
ஈரம்: விமர்சனம் ரீதியாக நல்ல பெயரை வாங்கி தந்த இந்த படம் தயாரித்த ஷங்கருக்கு தோல்வியை கொடுத்தது. யாருமே இந்த படத்தை தியேட்டரில் போய் பார்க்காமல் விட்டு விட்டனர். திரில்லர் படமாக வெளிவந்த இது அவருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது.
ரெட்டை சுழி: மாபெரும் இயக்குனர்களான பாரதிராஜா மற்றும் பாலச்சந்தர் இணைந்து நடித்த படம். பாலச்சந்தருக்கு இது கடைசி படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் என நம்பி ஏமாந்து விட்டார் ஷங்கர். இந்த படத்தை தயாரித்த அவருக்கு இது பெரும் நஷ்டத்தை கொடுத்தது.
ஆனந்தபுரத்து வீடு: வியாபார ரீதியாக இந்த படம் தோல்வியை சந்தித்தது. திரில்லர் சஸ்பென்ஸ் ஆக வெளிவந்த இந்த படம் தியேட்டரில் அந்த அளவிற்கு மக்களிடம் சென்றடையவில்லை. டிவி சீரியல் போல் இருக்கிறது என விமர்சனங்கள் வெளிவந்தது. இதுவும் ஷங்கர்க்கு பெரும் அடியை கொடுத்தது.
கப்பல்: இயக்குனர் ஷங்கரின் அசிஸ்டன்ட் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கிய முதல் படம் தான் இது. இளைஞர்கள் மத்தியில் இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றாலும் பேமிலி ஆடியன்ஸ் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் இதுவும் அவருக்கு தோல்வி படமாக அமைந்தது.