வெற்றிமாறனுடன் மோகன் ஜி-யை கம்பேர் பண்ணாதீங்க.. ஜாதி பூசலுக்கு சரியான பதிலடி!

இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறது. அதாவது ருத்ர தாண்டவம், திரௌபதி படங்களை தொடர்ந்து சமீபத்தில் செல்வராகவன் நடிப்பில் வெளியான பகாசூரன் படமும் விமர்சனத்திற்கு உள்ளானது. அதாவது இந்த படம் முழுக்க முழுக்க பிற்போக்கு சிந்தனை உடையதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

பெரும்பாலும் மோகன்ஜியின் படங்கள் விமர்சன ரீதியாக தொடர்ந்து தோல்வி அடைந்து வருகிறது. இந்நிலையில் மோகன்ஜி சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது இது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதாவது ஜாதியை முன்வைத்து இவர் படம் எடுப்பதால் விமர்சனத்திற்கு உள்ளாகிறது என்று பேட்டியாளர் கூறியிருந்தார்.

Also Read : விழிப்புணர்வு என்ற பெயரில் ஓவர் ஆட்டம் போடும் பகாசூரன் மோகன்.. சட்ட சிக்கலில் மாட்ட வைக்க குவியும் கண்டனங்கள்

இதற்கு பதிலளித்த மோகன் ஜி இதே கேள்வியை வெற்றிமாறனிடம் கேட்க முடியுமா, அவருடைய பொல்லாதவன் படத்தில் இருந்து அசுரன் படம் வரை தொடர்ந்து கத்தி, சண்டையாக தான். ஆனால் அவருடைய படத்திற்கு யாரும் எந்த எதிர்ப்பும் விமர்சனமும் செய்வதில்லை. ஆனால் நான் இன்னும் சினிமாவில் வெற்றி பெறவில்லை.

அதனால் தான் என்னை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்கள் என்று மோகன்ஜி கூறி இருந்தார். இதற்கு சரியான பதிலடியாக பேட்டியாளர், வெற்றிமாறன் அவருடைய படத்தில் ஏதாவது கட்சிக் கொடியை வைத்தால் கண்டிப்பாக கேள்வி கேட்பேன் என்று கூறினார். ஏனென்றால் வெற்றிமாறன் ஒரு தரப்பு மக்களை மட்டுமே வைத்து படம் எடுக்கக் கூடியவர் அல்ல.

Also Read : பல வருடங்களாக ஏமாற்றிய வெற்றிமாறன்.. எல்லாத்தையும் இழந்து நொந்து நூடுல்ஸ் ஆன சூரி

சமூகத்தில் நடக்கும் பிரச்சனையை அப்படியே மக்களுக்கு பிரதிபலிக்க கூடியவர். அதனால் தான் வெற்றிமாறனின் படங்கள் ரசிகர்களை பெரும் அளவில் கவர்ந்து வெற்றி அடைகிறது. மேலும் ஒரு ஜாதியோ, கட்சியையோ பிடித்துக் கொண்டு அவர் படங்கள் எடுத்ததில்லை.

ஆனால் மோகன் ஜி படத்தில் ஒரு நல்ல கருத்து இருந்தாலும் அதில் ஜாதி பூசல் இருப்பதாக தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகிறது. மேலும் வெற்றிமாறன் முற்போக்கு சிந்தனை கொண்டவர். ஆகையால் எப்போதுமே வெற்றிமாறனுடன் மோகன்ஜியை ஒப்பிட முடியாது என ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.

Also Read : விடுதலை 2-ம் பாகத்தின் ஹீரோ சூரி இல்லையாம்.. வியாபாரத்திற்காக வெற்றிமாறன் போட்ட பெரிய பிளான்