சாதுமிரண்டு தர்ஷன் கழுத்தைப் பிடித்த வீரபாகு.. எதிர்நீச்சலில் நடக்கப் போகும் அதிரடி

தான் நினைத்தது நடந்தாக வேண்டும் என எதிர்நீச்சல் குணசேகரன் வேட்டியை மடித்து கட்டித் திரிகிறார். யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கல்யாணத்துக்கு பந்தக்கால் நட வேண்டும் என விழாவை நடத்துகிறார். விருப்பம் இல்லாமல் கலந்து கொள்கிறார்கள் வீட்டு மருமகள்கள்.

தர்ஷனை தேடுவதற்காக ஒரு பக்கம் கொடைக்கானலுக்கு அடியாட்களை அனுப்பி வைக்கிறார் அறிவுக்கரசி. அங்கே பார்கவியை துரத்துகிறது அவரது கும்பல். ஒரு கட்டத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இன்னோவா காரில் ஒளிந்து கொள்கிறார்கள் பார்கவி மற்றும் அவரின் தந்தை.

அங்கே தான் கதையில் திருப்புமுனை அந்த கார் ஜீவானந்தத்திற்கு உடையது. காரை திறக்க வரும் அடியாட்களை ஜீவானந்தம் திட்டி அனுப்புகிறார். காரை திறக்கும் அவர், பார்கவி மற்றும் அவரின் தந்தையை பார்த்து ஷாக் ஆகிறார். ஆனால் பார்கவியின் தந்தை அவரிடம் உண்மையை சொல்ல மறுக்கிறார்.

மறுபக்கம் அறிவுகரசியின் அடியாட்கள் தர்ஷனையும் சுற்றி வளைத்து துரத்துகிறார்கள். அவர்களைப் பார்த்து ஓட்டம் பிடிக்கும் தர்ஷன் அதிர்ஷ்டவசமாக ஜீவானந்தம், பார்கவி பயணிக்கும் அதே காரில் ஏறுகிறார். இப்படி மொத்தமாய் எல்லோரும் ஜீவானந்தத்திடம் தஞ்சம் அடைகிறார்கள்.

தர்ஷன் காரில் ஏறியதுமே, அடப்பாவி இங்கேயும் வந்து விட்டாயா என பார்க்கவையின் தந்தை அவர் கழுத்தைப் பிடிக்கிறார். தன்மகள் பார்கவியை நம்பாமல் அவள் தான் தர்ஷனை இங்கே வர வளைத்து இருக்கிறாள் என இருவர் மீதும் கோபம் கொள்கிறார். இப்பொழுது அனைவரையும் காப்பாற்றும் பொறுப்பு ஜீவானந்தத்திடம் சேருகிறது.