என்னையும் ஏஆர் ரகுமானையும் தொடர்பு படுத்திய பொய்யான வதந்தி.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட விஜய் ஆண்டனி
Vijay Antony: கோலிவுட்டில் இசையமைப்பாளராக அறிமுகமாகி அதன் பின் நடிகராக வலம் வரும் விஜய் ஆண்டனியை பற்றிய வதந்தி ஒன்று தற்போது காட்டுத் தீயாய் பரவுகிறது. விஜய் ஆண்டனி பாஜகவுடன் இணைந்து ஏஆர் ரகுமானுக்கு எதிராக செயல்படுவதாக தனியார் யூடியூப் சேனலில் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
ஏஆர் ரகுமான் கடந்த 10ம் தேதி நடத்திய ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற இசை கான்செர்ட் நிகழ்ச்சியில் பல்வேறு விதமான குளறுபடிகள் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு விலை மதிப்பான டிக்கெடுகளை வாங்கிய ரசிகர்கள் பலரும் கூட்ட நெரிசலால் அதில் கலந்து கொள்ள முடியாமல் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் மீடியாவில் கான்செர்ட்டில் நடந்ததை பற்றி கூறினார்கள்.
பல பேர் ஏஆர் ரகுமானை விமர்சித்த நிலையில் திரையுலகமே அவருக்கு ஆதரவாக நின்றது. இந்த குளறுபடிக்கு நிகழ்ச்சியின் ஏற்பாட்டளர்கள் பொறுப்பேற்றுக்கொண்டு பிரச்சனையை முடித்து விட்டனர். இந்த சம்பவத்தை பெரிய அரசியலாகவே பார்க்கின்றனர். இதில் தேவை இல்லாமல் விஜய் ஆண்டனியை சம்பந்தப்படுத்தி விட்டனர். சமீபத்தில் பாஜாக யாத்திரைக்காக டைட்டில் பாடலை விஜய் ஆண்டனி கம்போஸ் செய்து கொடுத்தார்.
ஆனால் முதலில் ஏஆர் ரகுமானிடம் தான் பாஜக குழுவினர் அணுகினர். ஆனால் இசைப்புயல் அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கலந்து கொள்ள மாட்டேன் என உறுதியாக சொன்னதால், அவர்கள் திரும்பி சென்று விட்டனர். பின்பு தீனா- கங்கை அமரன் இணைந்து இந்த பாடலை கம்போஸ் செய்ததாக பிரபல யூடியூப் சேனல் வீடியோவில் தெரிவித்தனர்.
பாஜக யாத்திரைக்காக பாடலை இசையமைத்துத் தராத கோபத்தால் தான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஏஆர் ரகுமானுக்கு குறி வைத்ததாகவும் அதனால்தான் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சியில் குளறுபடிகள் நடந்துள்ளதாகவும் அந்த நிகழ்ச்சி பொறுப்பாளரான ஏசிடிசி நிறுவனத்தை சேர்ந்த பவித்ரன் செட்டி என்பவர் அண்ணாமலையுடன் சேர்ந்து இந்த காரியத்தை செய்துள்ளார். இதனால் ஏஆர் ரகுமானின் மீது கரும்புள்ளியை குத்தி விட்டனர்.
சமீப காலமாகவே பாஜகவிற்கு நெருக்கமாக வலம் வரும் விஜய் ஆண்டனியும் இந்த நிகழ்ச்சியின் குளறுபடிக்கு துணை நின்றதாகவும் அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டது. இந்த வீடியோவை போட்ட தனியார் யூடியூப் சேனல் மீது தற்போது விஜய் ஆண்டனி மான நஷ்ட வழக்கு தொடுத்து இருக்கிறார். இதன் மூலம் வரும் தொகையை நலிவடைந்த இசை துறை நண்பர்களுக்கு கொடுக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
அது மட்டுமல்ல ‘என்னைப் பற்றியும் சகோதரர் ஏஆர் ரகுமானையும் தொடர்புப்படுத்தி பொய்யான வதந்தி ஒன்றை பரப்புகிறார்கள். இது முற்றிலும் பொய்’ என்றும் விஜய் ஆண்டனி மொத்த வதந்திக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
அதிரடி அறிவிப்பை வெளியிட்ட விஜய் ஆண்டனி
