விஜய் டிவியின் பிரபல என்டர்டைன்மென்ட் ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ஏகத்திற்கு பிரபலமாகிவிட்டார் அஸ்வின் குமார். அதன்பின் ஹரிஹரன் இயக்கத்தில் அஸ்வின் ‘என்ன சொல்லப் போகிறாய்’ என்ற தமிழ் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
அந்த படத்தில் ப்ரோமோசனில் தேவையில்லாததை பேசி தன்னுடைய பெயரை கெடுத்துக் கொண்டார். அதன்பின் இவரைக் கண்டால் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் தப்பித்தோம் பிழைத்தோம் என எஸ்கேப் ஆனார்கள். இதனால் சமூக வலைதளங்களிலும் இவரை கேலி கிண்டல் செய்து கொண்டிருந்தனர்.
ஆனால் தம்பி இப்பொழுது நடித்திருக்கும் செம்பி படத்தில் அருமையாக நடித்திருக்கிறார். கடந்த ஆண்டு இறுதியில் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் அஸ்வின், லட்சுமி காந்தன் என்ற கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாகவே நடித்திருந்தார். இந்த படத்தால் அடுத்தடுத்தவருக்கு வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது. டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்திற்கு 3 படங்கள் நடிக்கும் ஒப்பந்தத்தில் அஸ்வின் கையெழுத்திட்டுள்ளாராம். முதல் கட்டமாக தேஜாவு பட இயக்குனர்களுடன் கூட்டணி வைக்கிறார்.
இவருக்கு சோசியல் மீடியாவிலும் ஏகப்பட்ட ரசிகைகள் உள்ளது. இதனால் ரசிகைகளும் இவருக்கு ஏதாவது காதல் இருக்கிறதா? என அவ்வப்போது கேள்வி கேட்கின்றனர். இதற்கு பதில் அளித்த அஸ்வின், ‘கடந்த பல ஆண்டுகளாகவே சிங்கிளாக தான் இருக்கிறேன். ஒரு நடிகராக இப்போதுதான் தன்னுடைய கெரியரை துவங்கி உள்ளேன். முதலில் சினிமாவில் கவனம் செலுத்த விரும்புகிறேன்.
காதல் இருந்தால் கெரியரை போன்றே அதற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஆகையால் இப்போது நான் சினிமாவை தான் முழு நேரமும் காதலிக்க விரும்புகிறேன்’ என்று ரசிகர்களிடம் வெளிப்படையாகப் பேசியதன் மூலம் அவர் இப்போது சாதிக்கத் துடி துடித்துக் கொண்டிருக்கிறார் என்பது தெரிகிறது.
‘ஒரு மாட்டுக்கு ஒரு சூடு தான்’ ஏற்கனவே பட்டு திருந்தியதால் தற்போது கிடைத்துக் கொண்டிருக்கும் பட வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி, முன்னுக்கு வர வேண்டும் என்ற எண்ணத்துடன் அஸ்வின் இருக்கிறார். இவருடைய நடிப்பில் அடுத்தடுத்த படங்களும் முழு வீச்சில் தயாராக போகிறது.