வாடிவாசல் மட்டுமில்லை எல்லா வாசலையும் திறக்கும் வெற்றிமாறன்.. சூரிக்கு அடித்த ஜாக்பாட்

விடுதலை 2 படம் டிசம்பர் 20ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது இந்த படத்திற்கு பிறகு வெற்றிமாறன் கையில் எடுக்கப் போகும் படம் வாடி வாசல். இதை அதிகாரப்பூர்வமாக அவரே பல பிரஸ் மீட்டில் கூறிவிட்டார். 2025 ஜனவரி மாதம் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது.

இப்படி வெற்றிமாறனும் அடுத்தடுத்த படங்களை கமிட்டாகும் நேரத்திலேயே அவர் கூட இருப்பவர்களுக்கும் ஒரு வழி காட்டிவிட்டு செல்கிறார்.ஏற்கனவே சூரியை ஹீரோவாக அறிமுகப்படுத்தி அவரது சினிமா கேரியரே வேற லெவலில் கொண்டு சென்று விட்டார்.

எல்ரெட் குமார் தயாரிக்கும் படம் தான் விடுதலை 2. இப்பொழுது இவர் அடுத்ததாக ஒரு படத்தை தயாரிக்க விருக்கிறார். இந்த படத்திலும் சூரி தான் ஹீரோ. இப்படி ஒரு படத்தை வைத்து அடுத்தடுத்த கட்டத்துக்கு முன்னேறி வருகிறார் சூரி.

அதேபோல் சூரி நடிக்கும் இந்த படத்தை இயக்க இருப்பதும் வெற்றிமாறன் கூட இருந்த அசிஸ்டன்ட் இயக்குனர் தான். ஜிவி பிரகாஷை வைத்து செல்பி படம் எடுத்தவர் இயக்குனர் மதிமாறன் இவர் தான் சூரி நடிக்கப் போகும் அடுத்த படத்தை இயக்குகிறார்.

இப்படி வெற்றிமாறன் தனது கூட வேலை செய்த ஆட்களுக்கு அடுத்தடுத்த படிக்கட்டுகளை காண்பித்து முன்னேறச் செய்கிறார். இதே போல் தான் இதற்கு முன்னரும் வெற்றிமாறனிடம் அசிஸ்டன்ட் வேலை செய்த பலபேருக்கு வழிகாட்டி இருக்கிறார்.

ஏற்கனவே விடுதலை 1, கொட்டுக்காளி, கருடன், என அடுத்தடுத்த படங்களில் சூரி ஹீரோவாக அசத்தி வருகிறார். இப்பொழுது விடுதலை இரண்டாம் பாகத்திலும் தனது அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். தனுஷ் போல் சூரியையும் வளர்த்து விட்ட பெரும் பங்கு வெற்றிமாறனை சேரும்.

Leave a Comment