தமிழ் சினிமாவில் தனுஷின் மாப்பிள்ளை படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான ஹன்சிகா, பின்னர் விஜய், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார்.
இளம் வயதில் ரசிகர்களின் இதயத்தை கவர்ந்தார். சிம்புவுடன் ஏற்பட்ட காதல், பின்னர் நடந்த பிரேக் அப் கூட பரபரப்பான செய்தியாக இருந்தது. 2022 ல் தனது தோழியின் முன்னாள் கணவரான சோஹேல் கதுரியாவை காதலித்து திருமணம் செய்தார் ஹன்சிகா.
இந்த திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் ஆடம்பரமாக நடைபெற்றது. அதை ஆவண படமாகவும் வெளியிட்டனர். ஹன்சிகா தற்போது தனது கணவரை விட்டு பிரிந்து, தாயுடன் வசித்து வருகிறார்.
அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து வாழ்கிறார்கள் என பல வதந்திகள் இணையத்தில் பரவி வந்தது.
பதிலடி கொடுத்த ஹன்சிகாவின் கணவர்
இந்நிலையில் வழக்கம் போல் ஹன்சிகா வதந்திகளுக்கு நேரடியாக எந்த பதிலும் அளிக்கவில்லை. அவற்றை பற்றி பெரிதாகக் கவலைப்படாமல் இருப்பது போலவே நடந்து கொண்டார். ஆனால், இந்த நேரத்தில் அவரது கணவர் சோஹேல் கதுரியா வதந்திகளுக்கு முதன்முறையாக விளக்கமளித்துள்ளார்.
வதந்திகளுக்கு பதிலளித்த சோஹேல், “எங்களுக்கு இடையே பிரச்சனை எதுவும் இல்லை” எனத் தெளிவாக கூறியுள்ளார். எங்களுடைய உறவு வலுவானது, நங்கள் இருவரும் ஒன்றாக மகிழ்ச்சியாக இருக்கிறோம், எங்களுக்கு இடையே எந்தப் பிரச்சினையும் இல்லை என்று அவர் தெளிவாக கூறியுள்ளார்.
இதன் மூலம், ஹன்சிகாவின் திருமண விவாகரத்து குறித்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளது. இதன் மூலம் சில ஊடகங்கள் ஹன்சிகா விவாகரத்து செய்யப் போவதாக வெளியிட்ட செய்திகள் வெறும் வதந்திகள் என்று தெரிய வந்துள்ளது.