கடவுள் இல்லனு சொல்றான் பாரு.. ரத்தத்தை வைத்த ரஜினி கொடுத்த பதிலடி

Rajinikanth : வயசானாலும் தன் ஸ்டைலை மாற்றிக் கொள்ளாமல் பல ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்து வைத்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது கொடுத்த பேட்டி ஒன்று தமிழ்நாட்டையே உறைய வைத்துள்ளது.

பொதுவாகவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடவுள் மேல் மிகப்பெரும் பற்று கொண்டவர். அவர் பேசும் ஒவ்வொரு மேடையிலும் கடவுளை பற்றி நினைக்காமல் இருந்ததில்லை. ஆனால் தற்போது இவர் பேசக்கூடிய கருத்து அனைவரையும் ஆச்சர்யமடைய செய்துள்ளது.

ரத்தத்தை வைத்து பேசிய ரஜினி

வீட்டில் ரஜினி கூறியதாவது ” நாம் பல சயின்டிஸ்ட்களை வைத்திருக்கிறோம். பல டெக்னாலஜி வளர்ந்திருக்கிறது. ஆனால் இன்றளவும் கூட ஒரு சொட்டு ரத்தத்தை நம்மால் உருவாக்க இயலவில்லை. இதை நன்கு தெரிந்திருந்தும் சில பேர் கடவுள் இல்லை என்று சொல்கிறார்கள்- ஆதங்கப்பட்டு பேசிய ரஜினி.

இதுவரை எந்த மேடையிலும் இந்த மாதிரி பேசாத ரஜினி தற்போது ரத்தத்தை ஒப்பிட்டு, கடவுள் இருக்கிறார் அதை நம்பாதவர்கள் இருக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல வருடங்களாக தன் பக்தியை விட்டுக் கொடுக்காத ரஜினிக்கு கடவுள் என்பவர் நம்பும் பொருளாக இருக்கலாம். மற்றவர்களுக்கு அதை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இப்படி ரத்தத்தை ஒப்பிட்டு ரஜினி பேசியது, பலரை கோபமடைய செய்தாலும் இவர் பேசியதில் ஒரு நியாயம் இருக்கிறதே! என்று சில ரஜினி ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். எப்படி இருந்தாலும் சினிமாவில் கொடி கட்டி பறக்கும் ஒரு நபரின் பேச்சை தான் இந்த உலகம் கேட்கும்.