நாய்க்குட்டி மாதிரி சொன்னதை செய்த ஹீரோ.. கூப்பிட்டு அசிங்கப்படுத்திய மணிரத்தினம்

சினிமாவில் நடித்து மக்களிடம் வரவேற்பு பெற வேண்டும் என்றால் அதற்கு முக்கியமாக நல்ல கதையுடன் கூடிய இயக்குனர் இருக்க வேண்டும். அந்த வகையில் எத்தனையோ இயக்குனர்கள் இருந்தாலும் ஒரு சில இயக்குனர்கள் தான் பிரம்மாண்டமான படங்களை எடுத்து வசூல் சாதனையை குவிக்க முடியும்.

அப்படி பார்த்தால் முதல் இடத்தில் இருப்பது இயக்குனர் மணிரத்தினம் தான். இவருடைய படம் பிரம்மாண்டமாகவும் இருக்கும் அதே நேரத்தில் எதார்த்தமான கதையுடன் கூடிய படங்களாகவும் அமையும். அதனால் சினிமாவில் இருக்கும் எல்லா நட்சத்திரங்களும் இவருடைய படத்தின் நடிப்பதை தவமாக இருந்து காத்துக் கொண்டிருப்பார்கள்.

அப்படித்தான் இந்த ஹீரோக்கும் மிகப்பெரிய ஆசை இருந்தது. அவர் வேறு யாருமில்லை பின்னணிப் பாடகர் யேசுதாஸ் மகன் விஜய் யேசுதாஸ். இவர் பாடகராக இருந்தாலும் இவருடைய ஆர்வம் அனைத்தும் நடிப்பில் தான் இருந்தது. அதற்காகவே சில படங்களில் நடிக்கவும் தொடங்கினார். இவர் தமிழில் தனுஷ் நடித்து வெளிவந்த மாரி படத்தில் வில்லனாக நடித்து பெயர் பெற்றார்.

ஆனாலும் அதன் பின் இவருக்கு சொல்லும் படியான பெரிய வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. அடுத்து எப்படியோ தட்டு தடுமாறி இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்தார். ஆனால் அந்தப் படங்கள் வந்த இடம் தெரியாமலே போய்விட்டது. அடுத்து தமிழ் படங்களில் தான் நம்மால் ஜெயிக்க முடியவில்லை என்று மலையாள படங்களில் நடிக்க போய்விட்டார்.

இந்த சூழ்நிலையில் தான் இயக்குனர் மணிரத்தினத்தின் உதவி இயக்குனர் பொன்னியின் செல்வன் படத்தில் விஜய் யேசுதாஸுக்கு ஒரு காட்சி இருப்பதாக நடிக்க கூப்பிட்டு இருக்கிறார். உடனே அவரும் மணிரத்தினம் படம்னா கண்டிப்பாக நமக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்று போயிருக்கிறார். பிறகு அங்கே இவரை மொட்டை அடிக்க சொல்லி, தாடியையும் எடுக்க சொல்லி இருக்கிறார்கள். ஆனால் இவர் நான் மொட்டை அடிக்கிறேன் என்று அடித்து விட்டு தாடி மட்டும் இருக்கட்டும் என்று கூறியிருக்கிறார்.

அதன் பின் இதை பார்த்த ஓகே செய்த மணிரத்தினம், பிறகு படகு ஒட்டுவது போல் இவரை வைத்து காட்சி எடுத்து அனுப்பி விட்டார்கள். அதன்பின் மறுபடியும் கூப்பிட்டு குதிரை ஓட்ட சொல்லி இருக்கிறார்கள் அதையும் விஜய் யேசுதாஸ் செய்திருக்கிறார். இப்படி மணிரத்தினம் சொன்னது எல்லாத்தையும் நாய்க்குட்டி மாதிரி செஞ்ச இவருக்கு கடைசியில் அவமானம் தான் மிச்சம். ஏனென்றால் இவர் நடித்த எந்த சீனுமே படத்தில் வரவில்லை. இப்படி கூப்பிட்டு அசிங்கப்படுத்தி விட்டார் என்று மிகவும் வருத்தப்பட்டு இருக்கிறார்.