ஹீரா உடன் அதிக படம் நடித்த ஒரே நடிகர்.. அஜித்துக்கு முன்பே காதல் தூது விட்ட நாடோடி மன்னன்

இதயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் 1986ஆம் ஆண்டில் அறிமுகமானவர் நடிகை ஹீரா. அமெரிக்காவில் படித்துக் கொண்டு இருந்தவரை பார்த்த இதயம் பட தயாரிப்பாளர் இந்த பொண்ணுதான் வேண்டும் என அடம் பிடித்து அந்த படத்தில் நடிக்க வைத்துள்ளார்.

அதன் பின் மும்பையில் வேலை நிமித்தமாக சென்றவர் மீண்டும் என்றும் அன்புடன், நீ பாதி நான் பாதி போன்ற படங்களில் நடித்தார். இந்த படங்கள் சரிவர போகாத நிலையில், மணிரத்தினம் அழைத்து வந்து தனது திருடா திருடா படத்தில் நடிக்க செய்தார். அதன் பின் மார்க்கெட்டில் கொடி கட்டி பறந்தார் ஹீரா.

அஜித் உடன் காதல் கோட்டை, தொடரும் போன்ற படங்களில் நடித்தார். அன்றைய காலகட்டங்களில் இருவருக்கும் இடையே நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனது. இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். சினிமா கேரியர் தான் முக்கியம் என இரு வீட்டில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பி அந்த காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

அஜித்துக்கு முன்னரே நடிகர் சரத்குமார் ஹீராவை விரும்பி இருக்கிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து கிட்டத்தட்ட நான்கு படங்களில் ஒன்றாக நடித்திருக்கிறார்கள். தசரதன், பேண்ட் மாஸ்டர், நம்ம அண்ணாச்சி, முன் அறிவிப்பு என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளனர்.

4 படங்களில் நடித்தது மூலம் இருவருக்கும் நல்ல ஒரு புரிதல் இருந்து வந்தது நடிகர். சரத்குமாருக்கு ஹீராவை பிடித்து போனது, ஒருதலையாக காதலித்து வந்தார் ஆனால் ஹீரா இவருடைய காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. தொடர்ந்து நடிக்க வேண்டும், கேரியர் தான் முக்கியம் என அப்பொழுது சரத்குமாருக்கு மறுப்பு தெரிவித்துவிட்டார்.