Movie : விஜய் சேதுபதி மற்றும் திரிஷா இணைந்து நடித்த 96 திரைப்படம் பயங்கரளவு வெற்றியை கொடுத்தது. இந்தத் திரைப்படத்தின் பாகம் இரண்டு வெளிவருமா என்று எதிர்பார்க்கும் ரசிகர்களும் இருக்கிறார்கள். த்ரிஷா மற்றும் விஜய்சேதுபதியின் கம்போ திரையில் நல்ல வரவேற்பை கொடுத்தது.
ராம் மற்றும் ஜனனி என்ற கதாபாத்திரம் அந்த திரைப்படத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். படத்திற்கு ஹிட் கொடுத்ததே மியூசிக் என்று சொல்லலாம். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தின் பாடல் திரையில் மட்டுமல்ல இன்றளவும் ரசிகர்கள் மனதில் பதிந்த பாடல்களாகவே அமைந்துள்ளது.
இந்த படத்தில் இடம்பெறும் “காதலே காதலே” என்ற பாடல் தான் இப்போது வரையிலும் ஒரு சிலர் ஃபோன்களின் ரிங்டோனாகவே இருக்கிறது. பிரம்மாண்டம் இல்லாத எளிமையான காட்சிகள் கூட ஹிட் அடித்தது. இப்படத்தை இயக்கிய சி பிரேம்குமாருக்கு பயங்கரமான பாராட்டு மழை பொழிந்தார்கள். ஒரு படத்தில் நல்லது இருந்தால் கெட்டதும் இருக்கும், தானே அதே மாதிரி தான் இந்த படத்திற்கு, நெகட்டிவ் விமர்சனங்களும் சிலரால் கொடுக்கப்பட்டது.
வெறும் 10 கோடியில் எடுக்கப்பட்ட 96 திரைப்படம் 50 கோடிக்கு மேல லாபம் பார்த்து திரை உலகினரை அதிர வைத்தது. அதாவது இந்தியாவில் மட்டும் ₹36 கோடி வசூல் செய்துள்ளது வெளிநாடுகளில் ₹13.5 கோடி வசூலை பார்த்துள்ளது.
உண்மையை உடைத்த இயக்குனர்..
“உண்மையிலேயே 96 திரைப்படம் ஹிந்தியில் எடுப்பதற்காக எழுதப்பட்டது. இதில் அபிஷேக் பச்சனை ஹீரோவாக நடிக்க வைக்கலாம் என்று எண்ணினேன். அப்போது அவருக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.
தற்போது 96 மற்றும் மெய்யழகன் திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளேன். அதற்காக தற்போது சில ஸ்கிரிப்டுகளையும் இந்திக்காக உருவாக்கி வருகிறேன்- பேட்டியளித்த இயக்குனர் சி பிரேம்குமார்”. இந்தப் பேட்டியை பார்த்த 96 பட ரசிகர்கள் மிகவும் ஆச்சரியத்தில் உள்ளனர்.