சென்சார் போர்டுக்கு விபூதி அடித்த இசைஞானி.. பெரிய மனுஷன் பாக்குற வேலையா இது?

இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் நமது அன்றாட வாழ்க்கையில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது, 80ஸ், 90ஸ், 2K என்று அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கும்படியான ட்யூன்களை உருவாக்கியுள்ளார்.

இன்று autotune பெருமளவில் வந்து விட்டாலும், கூட இவரது தனித்துவமான இசையை வேறு யாராலும் கொடுக்க முடியவில்லை என்பது தான் உண்மை.

தற்போதெல்லாம் இளையராஜா மீது மக்களுக்கு சிறிய கோபம் ஒன்று இருக்க காரணம், அவர் சில சமயங்களில் மேடைகளில் பேசும் ஆணவப்பேச்சு.

அதே நேரத்தில், அவர் copyright பிரச்சனையும் சமீப காலமாக அதிகமாக செய்து வருகிறார். இந்த நிலையில், இவர் பார்த்த ஒரு வேலையை பார்த்து ஒரு சிலர் பெரிய மனுஷன் பாக்குற வேலையா இது என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.

சென்சார் போர்டுக்கு விபூதி அடித்த இசைஞானி

அப்படி பட்ட ஒரு வேலையை பார்த்திருக்கிறார் இசைஞானி. இன்றளவும் பட்டிதொட்டியெங்கும் famous-ஆக இருக்கும் பாடல் தான் நிலா காயுது.

இந்த பாடல் கமலஹாசனின் சகலகலா வல்லவன் படத்தில் இடம்பெறும். இன்றளவும் கிராமங்களில் நடக்கும் ஆடலும் பாடலும் நிகழ்ச்சியில், நிச்சயம் இந்த பாடல் இடம் பெரும்.

ஆனால் இந்த பாடல் சகலகலா வல்லவன் படத்துக்காக உருவான பாடலே இல்லை. இந்த பாடலை 1981-ஆம் ஆண்டு வெளியான நல்லதே நடந்து தீரும் என்ற படத்தில் தான் வைத்தார்கள்.

ஆனால் அந்த பாடல் கட்சிக்கும், பாடலுக்கு சென்சார் போர்டு தடை விதித்தது. இசைஞானி இளையராஜாவால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

அதனால், அவர் தனது அடுத்த படமான சகலகலா வல்லவன் படத்தில், பாட்டு வரிகள் மட்டும், ம்யூசிக்கில் கொஞ்சம் பட்டி டிங்கரிங் வேலை பார்த்து கொடுத்துள்ளார். அப்படி தான் இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் வேற லெவல் ஹிட் அடித்தது.

Leave a Comment