Vanitha Vijayakumar : வனிதா விஜயகுமார் இயக்கி, நடித்து இருக்கும் மிஸஸ் அண்ட் மிஸ்டர் படம் என்ற தியேட்டரில் வெளியாகி இருக்கிறது. ராபர்ட் மாஸ்டர், ஷகிலா, பவர் ஸ்டார் போன்ற பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்தின் விளம்பரத்திற்காக ரஜினிகாந்தை வனிதா மற்றும் ஜோவிகா சந்தித்திருந்தனர்.
அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இன்று இந்த படம் வெளியாகி இருக்கும் நிலையில் இளையராஜா படத்தின் மீது வழக்கு போட்டு இருக்கிறார். மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இளையராஜா இசையமைத்த ராத்திரி சிவராத்திரி என்ற பாடல் மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பதாக வழக்கு போட்டிருக்கிறார்.
அதாவது இந்த பாடலை பயன்படுத்தியதற்கு தன்னிடம் இருந்து காப்புரிமை பெறவில்லை என்று இளையராஜா தரப்பில் இருந்து கூறப்பட்டிருக்கிறது. மேலும் காப்புரிமை மீறல் காரணமாக தனக்கு நஷ்ட ஈடு வேண்டும் என்றும் இளையராஜா வழக்கு போட்டு இருக்கிறார்.
வனிதா விஜயகுமார் மீது இளையராஜா போட்ட வழக்கு
இதற்கு முன்னதாக ஆதிக் ரவிச்சந்திரன், அஜித் கூட்டணியில் வெளியான குட் பேட் அக்லி படத்திலும் இளையராஜா தனது பாடல்கள் அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளதாக 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இதேபோல் இப்போது வனிதா படத்திற்கும் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.
ஆனால் வனிதா விஜயகுமார் தரப்பிலிருந்து மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு காப்புரிமை வாங்கி இருப்பதாக கூறியிருக்கின்றனர். மேலும் அந்த பாடலை ரீமேக் செய்து துபாயில் படப்பிடிப்பு நடத்தப்பட்டதாக தெரிவித்து இருக்கின்றனர்.
ஆனால் ராத்திரி சிவராத்திரி பாடல் அனுமதி வாங்கவில்லை என இளையராஜா தரப்பிலிருந்து கூறப்படுகிறது. ஆகையால் பாடலை நீக்க வேண்டும், நஷ்ட ஈடு கேட்டும் இளையராஜா தொடரப்பட்டுள்ள வழக்கு திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது.