அஜித், முருகதாஸ் இணைய வாய்ப்பே இல்லையாம்.. பிரச்சனையே இதான்?

Ajith : நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் டாப்பில் இருக்கும் நடிகர். இவர் என்னதான் ரேஸிங்கில் பிசியாக இருந்தாலும் அடுத்தடுத்த படங்களிலும் கதையை தேர்வு செய்வதில் கவனத்தி செலுத்தி வருகிறார்.

தற்போது நண்பர்கள் தினத்தன்று அனிருத், சிறுத்தை சிவா, ஏ ஆர் முருகதாஸ் மற்றும் சிலர் அஜித்தை நேரில் சந்தித்துள்ளனர். இதனால் படத்தை பற்றிய பேச்சுவார்த்தை நடந்ததாக பேசப்பட்டு வந்தது. அவர்கள் எடுத்த புகைப்படங்களும் வைரல் ஆகி வருகிறது.

முருகதாஸ்-க்கும் அஜித்திற்கும் இடையே பிரச்சினை..

ஏ ஆர் முருகதாஸ்-ம் அஜித்தும் இணைந்து படம் செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் இதெல்லாம் பொய்யானா தகவல் என ஒருபக்கம் கூறி வருகிறார்கள். அதாவது ஏ ஆர் முருகதாஸ், ராமநாராயணன், அஜித் இவர்கள் இணைந்து படம் எடுப்பதற்காக முடிவு செய்து இருந்ததாகவும்.

பிறகு சம்பள விஷயத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக இந்த படம் நிறுத்தப்பட்டுவிட்டதாகவும் தகவல்கள் பேசப்பட்டு வருகிறது. இதனால் அஜித்தும், ஏ ஆர் முருகதாஸ்-ம் இணைந்து படம் பண்ண ஒருபோதும் வாய்ப்பில்லை என்றும் கூறி வருகிறார்கள் திரை பிரபலங்கள்.

பிறகு எப்படி இந்த புகைப்படம் என்று பார்த்தால் சிறுத்தை சிவாவும் அஜித்தும் நல்ல நண்பர்கள். இது எதார்த்தமாக நடந்த ஒரு சந்திப்பு என்றும், தவிர்க்க முடியாமல் அஜித்தும், ஏ ஆர் முருகதாஸ்-ம் போட்டோ எடுத்து கொண்டுள்ளார்கள் எனவும் சிலர் பேசிக்கொள்கிறார்கள்.

காலம் அனைத்திற்கும் மருந்து போடும் என சொல்லுவார்கள். அதுபோல் இவர்கள் அனைத்தையும் மறந்து மீண்டும் கூட்டணி போட்டு படம் எடுக்க வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாம். ரசிகர்களின் ஆசையை கண்டிப்பாக நிறைவேற்றுவாரா அஜித்? பொருத்திருந்து பார்க்கலாம்.