Spotifyyil முதல் 3 இடத்தை பிடித்த விஜய்.. தூக்கிவிட்டு இசையமைப்பாளர்கள்

Vijay : விஜய் என்ற பெயர் கேட்டாலே அனைவரும் தலையின் உச்சயில் வைத்து பேசுவார்கள். அந்த அளவிற்கு ஒரு நடிகரின் சாதனை சினிமாவில் நிகழ்ந்திருக்கிறது.

இந்த அளவிற்கு உச்சத்தை விஜய் எட்டினாலும் எப்போதும் தலை கனத்தை காண்பித்தது இல்லை. எவ்வளவு வருடமானாலும் விஜயின் படம் ரசிகர்களுக்கு போர் அடிக்காது.
1990களில் ஆரம்பித்து இன்று வரை, விஜயின் எந்த படம் வெளியானாலும் ரசிகர்கள் பிரம்மாண்டமாக பட்டாசு வெடிக்கிறார்கள்.

தளபதிக்கு எப்படி சினிமாவில் செல்வாக்கு இருந்ததோ, அதேபோல தான் இப்போது அரசியலிலும் செல்வாக்கு இருக்கிறது. ரசிகர்களின் உறுதுணையும், ஆதரவும் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே தான் போகிறது.

சாதனை படைத்த தளபதி..

லியோ – இந்தப் படத்தில் லியோதாஸ் என்ற கதாபாத்திரத்தில் மிகவும் வித்தியாசமான தோற்றத்துடன் நடித்திருப்பார் விஜய். “Bloody sweet” இன்று விஜய் சொல்லும் இந்த டேக் ரசிகர்களுக்கிடையே எதிர்பாராத ஒரு வரவேற்பு கொடுத்தது. 2023-இல் ஹிட் அடித்த மிகப்பெரிய படம் லியோ என்ற பெயரை பெற்றுது. 612 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

வாரிசு – மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இத்திரைப்படம் குடும்ப உறவு, உணர்வு கலந்த படமாக விஜய்க்கு அமைந்தது. இறுதியில் படம் 360 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

பீஸ்ட்– ஆக்சன் நிறைந்த திரைப்படம். இளம் தலைமுறையினரிடம் நல்ல வரவேற்பை பெற்றது. திரைக்கு வருவதற்கு முன்பே பெரிய ஆரவாரத்துடன் கொண்டாடப்பட்டது. விஜய்க்கு இந்த படத்தில் BGM சொல்லவே வேண்டாம். வேற லெவலில் அசத்தியிருப்பார் அனிருத்.

மேலே இருக்கும் 3 படங்களுமே spotify-இல் 400 மில்லியன் ஸ்ட்ரீம் செய்யப்பட்ட ஆல்பங்களைக் கொண்டுள்ளது. 400 மில்லியன் ஸ்ட்ரீம் செய்யப்பட்ட ஒரே தென்னிந்திய நடிகர் விஜய் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

அனிருத் இசையில், லியோ – 460 மில்லியன். தமன் இசையில், வாரிசு – 430 மில்லியன். பீஸ்ட் – 400 மில்லியன்.