குணசேகரன் யோசிப்பதை தாண்டி ஜீவானந்தம் போடும் புரியாத புதிர்.. தில்லா எதிரிகளை அலற விட போகும் ஜனனி

குணசேகரன், கதிர், அறிவு மும்மூர்த்திகளாகிய இவர்கள் தர்ஷன் கல்யாணத்தை முடிப்பதற்காக சதி செய்து வருகிறார்கள். தர்ஷன், பார்கவியை திருமணம் செய்ய துடித்துக் கொண்டே இருக்கிறார். ஆனால் தர்ஷன் மனக்கோட்டையை சிதைக்கும் முடிவில் மும்மூர்த்திகள் செயல்பட்டு வருகிறார்கள்.

எப்பொழுதும் போல் உப்புக்கு சப்பாணியாய் தர்ஷன் முழித்து கொண்டிருக்கிறார். அம்மா பக்கம் துணிந்து நிற்காமல் அப்பாவின் அடி, உதைக்கு பயந்து என்ன செய்வது என்று தெரியாமல் பயத்திலேயே இருக்கிறார். ஈஸ்வரி மட்டும் இந்த கல்யாணம் நடக்காது என அவருக்கு தைரியம் கொடுத்து வருகிறார்.

மும்மூர்த்திகள் திருமணத்திற்கு உண்டான வேலைகளை செய்கிறார்கள் ஆனால் வீட்டுப் பெண்கள் மற்றும் ஜீவானந்தம், வக்கீல் சாருபாலா டீம் வேறு ஒரு பாதையில் அவர்களுக்கு ஆப்படிக்க திட்டம் போட்டு வருகிறார்கள். இதுதான் சற்று புரியாத புதிராய் இருக்கிறது.

குணசேகரன் திட்டப்படி வீட்டில் இருந்த பார்கவியை வெளியில் துரத்துகிறார்கள். முதல் கட்டமாய் நாம் ஜெயித்து விட்டோம் என மும்மூர்த்திகள் டீம் ஆர்ப்பரிக்கிறது. ஆனால் ஒரு பக்கம் ஜனனி போடும் புதிரால் பல திருப்பங்கள் ஏற்படும் என தெரிகிறது.

கல்யாண பத்திரிக்கை அச்சடிக்கும் இடத்திற்கு சென்று ஒரே ஒரு பத்திரிகை வேண்டும், மணமகன் தர்ஷன் மணமகள் பார்கவி என அச்சடிக்க சொல்கிறார். மறுபக்கம் ஜீவானந்தம் பார்கவியின் மொபைல் சிம் கார்டை எடுத்து உடைத்து எரிகிறார். இதிலிருந்து அவர்கள் குணசேகரன் டீமுக்கு ஏதோ செக் வைக்கிறார்கள் என்று மட்டும் தெரிகிறது.