கடுகளவு கூட ரஜினியை நெருங்க முடியல.. ஜூனியர் NTR கூறிய ரகசியம்

சினிமா துறையில் தனது தனிச்சிறப்பு நடையாலும், எளிமையான நடிப்பாலும் மக்களை ஈர்த்தவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினி. வயது 74 கடந்தும், திரையை விட்டு விலகாமல் தொடர்ந்து புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அவருடைய இந்த சுறுசுறுப்புதான் ரசிகர்களை மேலும் கொண்டாட்டத்தில் ஆழ்த்துகிறது.

“ஜெய்லர்” படத்தை விட இந்த “கூலி” படத்தில் ரஜினியின் மாஸ் இன்னும் அதிகமா இருக்கு என மீம்ஸ்களும் பகிரப்பட்டன. எந்த படம் வந்தாலும் மக்கள் பேசாமல் இருக்க மாட்டாங்க அதேபோல் “கூலி”படமும் பலரை பேச வைத்தது. தலைவரின் மாஸ் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது ஒவ்வொரு முறையும் வித்தியாசமாக இருக்கும்.

IMDB-யின் லிஸ்டில் முக்கிய இடம் பிடித்த கூலி

IMDB வெளியிட்டிருக்குற ‘மோஸ்ட் அன்டிசிபேட்டட்’ லிஸ்டில் இந்திய அளவிலேயே இரண்டாவது இடத்தை பிடிச்சிருக்கு “கூலி”. அதே நாளில் வெளியாகும் ஜூனியர் என்டிஆர், ஹ்ரித்திக் ரோஷன் நடிக்கும் “வார்டு – 2” படம் ஏழாவது இடத்தில இருக்கு. இது ரஜினியின் மாஸ்ஸை மீண்டும் நிரூபிக்குற ஒரு சின்ன உதாரணம்.

“வார்டு – 2” படத்தின் பட்ஜெட் அதிகம், அதோட காஸ்டும் ஹெவியா இருக்கு. ஆனாலும், ஒரு ரஜினி படம் என்றாலே அது மக்களுக்கு வேற லெவல் எதிர்பார்ப்பு தருது. அவருடைய பெயரே ஒரு பிராண்ட் அதற்காகத்தான் இப்பவும் கோழி படம் முழு இந்திய அளவில் வைரலாகி இருக்கு.

ஜூனியர் என்டிஆர் கூட சமீபத்திய பேட்டியில் ரஜினியை புகழ்ந்திருக்கிறார். “74 வயசுல என்ன ஒரு எனர்ஜி!” அப்படின்னு சொன்ன அவர், அவருடைய ரசிகனாக மாறியிருக்கும் மாதிரி தோன்றுகிறது.

இதுதான் ரஜினியின் தன்னம்பிக்கை மற்றும் அவர் மீது மக்களிடம் இருக்கும் நம்பிக்கையின் அடையாளம். ரஜினியை யாராலும் நெருங்க முடியாது அவர் ஒரு காலத்துக்கே முந்தையவர்.