அரசியல், சினிமா என இருதலைக்கொல்லியாய் மாறிய விஜய்.. அவரை பார்த்து பயந்து தான் கன்ஃபார்ம் ஆன தளபதி-69

Kollywood Actor Vijay confirms Vijay 69: தமிழ் சினிமாவில் எம்ஜிஆர்-சிவாஜி, ரஜினி-கமல், அஜித்- விஜய் என எப்போதுமே ஒரு வெறித்தனமான போட்டி, கலைக்கு ஆரோக்கியமாக இருந்து வருகிறது. இதில் ஒருவர் அரசியலை கையில் எடுக்க, மற்றவர் விலகிக் கொண்டது காலத்தின் கட்டாயம்.

வெற்றியோ தோல்வியோ அதனை கடந்து இறுதிவரை போராடி நட்பு உடனையே இருந்து வருகின்றனர் நம் ஹீரோக்கள்.

விஜய் அவர்கள் சினிமாவை தாண்டி அரசியலில் காலெடுத்து வைக்கும் பொருட்டு சுய விளம்பரத்துடன் மாணவர்களுக்கு பரிசு கொடுப்பது, நூலகம் திறப்பது,வெள்ள நிவாரணம் போன்ற பல பணிகளை செய்து வருகிறார். மேலும் மக்கள் இயக்கத்தின் மூலம் பல திட்டங்களை செயல்படுத்தி தனது அரசியல் நுழைவை உறுதிப்படுத்தி வருகிறார்.

லியோவின் வெற்றிக்குப் பின் ஆர்ப்பாட்டம் இல்லாத ஜாலியாக விஜய் 68 கமிட் ஆகி சைடு பை சைடு மக்கள் மன்றத்தின் மூலம் அரசியலிலும் தனது பார்வையை செலுத்தி வருகிறார். இதனால் சினிமா ஆர்வலர்கள் பலரும் இதுதான் விஜய்க்கு கடைசி படம் இதன் பின் அரசியலுக்கு சென்று விடுவார் என்று கொளுத்தி போட்டு உள்ளனர்.

இது இப்படி இருக்க எதிர் துருவமான அஜித்தோ சைலன்டாக மகிழ்திருமேனியின் விடாமுயற்சிக்கு பின் ஆதிக், வெற்றிமாறன், விஷ்ணுவர்தன் என பல இயக்குனர்களுடன் கதை கேட்டு அடுத்த படங்களில் நடிக்க கமிட்டாகி வருகிறார்.

இதனால் அஜித் போட்டியில்லாமல் முன்னேற தான் அடுத்த இடத்திற்கு தள்ளப்படுவோமோ என்று விஜய் யோசிப்பதாகவும், சினிமாவில் நடித்துக் கொண்டே அரசியலில் ஈடுபட போவதாகவும், முதல்வரானால் பின் நடிக்க வேண்டாம் என்று விஜய் யோசிப்பதாகவும் நம்பத்தக்க விஜய்யின் வட்டாரங்கள் மூலம் தகவல் கசிந்து உள்ளது.

அப்படியானால் விஜய் 69 கன்ஃபார்ம். ஒரு படத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போதே அடுத்த படத்திற்கு ஸ்கெட்ச் போடும் விஜய் இப்போது தனது அடுத்த படமான விஜய் 69 காக சன் பிக்சர்ஸ் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் உடன் கைகோர்த்து உள்ளார். கார்த்திக் சுப்புராஜ் விஜய்க்காக தெறிக்கவிடும் ஆக்சன் திரில்லர் கதையை ரெடி பண்ணி விஜய்யின் லுக்கை முடிவு செய்ய சகாக்களுடன் டிஸ்கஸ் பண்ணி வருகிறாராம்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →