ஹார்ட் டிஸ்கை கண்டுபிடித்த ஐஸ்வர்யா.. லால் சலாம் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா.?

Rajini : ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில் லால் சலாம் படம் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடித்திருந்தனர். தனது மகளுக்காக ரஜினி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஆனால் லால் சலாம் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை தான் பெற்றது. இதனால் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம் கொடுத்தது. இந்நிலையில் நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் லால் சலாம் படத்தை வெளியிட படக்குழு முயற்சி செய்தது.

இந்த சூழலில் படத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க் காணாமல் போய்விட்டதாக ஐஸ்வர்யா கூறியிருந்தார். அந்த காட்சிகளை படத்தில் இணைத்தால் தான் தாங்கள் லால் சலாம் படத்தை வாங்குவோம் என்று நெட்பிலிகஸ் நிறுவனம் கூறிவிட்டது.

ஓடிடியில் வெளியாகும் லால் சலாம்

லால் சலாம் படம் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான நிலையில் ஒரு வருடங்கள் கழித்தும் படம் ஒடிடியில் வெளியாகாமல் இருந்தது. இப்போது ஹார்ட் டிஸ்கை கண்டுபிடித்து விட்டார்களா என்று தெரியவில்லை. ஏனென்றால் வருகின்ற பக்ரீத் பண்டிகை முன்னிட்டு ஜூன் 6-ம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளது.

அதாவது சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் தான் லால் சலாம் படம் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் நெக்ஸ்ட் வெளியிட்டு இருக்கிறது. ரஜினி இப்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு தொடர்ந்து இரண்டு படங்களில் நடித்துக் கொடுக்கிறார்.

ஆகையால் கூட லால் சலாம் படத்தை சன் நெக்ஸ்ட் வாங்கியிருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஒருவழியாக ஒரு வருடம் கழித்தாவது லால் சலாம் படம் ஓடிடிக்கு வருவது படக்குழுக்கு கிடைத்த வெற்றி தான்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →