King Kong : பிரபல நகைச்சுவை நடிகரான கிங் காங் மகளின் திருமணம் இன்று நடைபெற்றது. உயரம் குறைவாக இருந்தாலும் தனது திறமையால் பல படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இந்த சூழலில் தனது மூத்த மகளின் திருமணத்தை சென்னை பெசன்ட் நகரில் உள்ள முருகன் கோவிலில் நடத்தினார்.
திருமணமாகும் ஒரு மாதத்திற்கு முன்பே கிங் காங் புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரலானது. அதாவது முன்னணி பிரபலங்களின் வீட்டிற்கு நேராக சென்று அழைப்பிதழை வைத்திருந்தார். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, கார்த்தி, சிவகார்த்திகேயன், டி ராஜேந்தர், கன்னட நடிகர் சிவராஜ்குமார் என முன்னணி நடிகர்களின் வீட்டுக்கே சென்று பத்திரிக்கை வைத்திருந்தார்.
இவர்கள் திருமணத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்த்த நிலையில் யாரும் வராதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக தான் இருக்கிறது. கிங் காங் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர். முத்துக்காளை போன்ற அவருடன் பயணித்த காமெடி நடிகர்கள் சிலர் திருமணத்தில் பங்கு பெற்றனர்.
கிங் காங் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்ளாத முன்னணி நடிகர்கள்
ஏன் பெரிய நடிகர்கள் வரவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பொதுவாகவே சினிமா பிரபலங்கள் திருமணத்தை தாண்டி வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதுதான் வழக்கம். அதுவும் கிங்காங் எளிய முறையில் கோயிலில் தனது மகளின் திருமணத்தை நடத்தி இருக்கிறார்.
சென்னையில் பிரமாண்டமாக மகளின் வரவேற்பை நடத்த இருக்கிறார். இதில் கண்டிப்பாக முன்னணி நடிகர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யார் யார் கலந்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.
குறிப்பாக ரஜினிகாந்த் கலந்து கொள்வாரா என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இப்போது கீர்த்தனா மற்றும் நவீன் ஆகியோருக்கு திருமண வாழ்த்துக்களை ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் கூறி வருகின்றனர்.