சன் பிக்சர்ஸ்யிடம் தயங்கி நிற்கும் லோகேஷ் கனகராஜ்.. அமீர்கான், நாகர்ஜுனாக்கு பறந்த இமெயில்

லோகேஷ்,சன் பிக்சர்ஸ் மற்றும் ரஜினிகாந்த் என பெரிய லெவெலில் போய்க் கொண்டிருக்கும் ப்ராஜெக்ட் கூலி படம். நாகார்ஜுனா, அமீர்கான் என பெரும் கூட்டணி. இந்த படத்திற்கு இப்பொழுதே பெரும் ஹைப் எகிறி உள்ளது. ஆகஸ்ட் 14ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..

கூலி படத்திற்கு எந்த ஒரு ப்ரோமோஷன் ஸ்டெப்பும் எடுக்காமலே பெரிய லெவலில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனால் இந்த உற்சாக உணர்ச்சி மிகுதி லெவலை குறைக்க லோகேஷ் திட்டம் போட்டுள்ளார். இந்த எக்சைட்மென்ட் படத்திற்கு நெகட்டிவாக அமையக்கூடாது என பயப்படுகிறார்.

ஏற்கனவே கூலி படத்தின் பிசினஸ் வேற லெவெலில் சென்று கொண்டு இருக்கிறது. ஓ டி டி, டிஜிட்டல் என இந்த படத்திற்கு நல்ல லாபம் கிடைத்துள்ளது. இதனால் இது ஆயிரம் கோடி வசூல் தரும் என்றெல்லாம் மனக்கோட்டை கட்டிவிடக்கூடாது. இப்படி ஒரு சூழ்நிலை உருவாகுவதால் ஆரம்பத்திலேயே எண்டு கார்டு போட துடிக்கிறார் லோகேஷ்.

இதனால் கூலி படத்திற்கு எந்த ஒரு டீசர் மற்றும் ட்ரெய்லர் வெளியிட வேண்டாம் என சன் பிக்சர்ஸ் இடம் தயங்கி கூறியுள்ளார் லோகேஷ். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த சன் பிக்சர்ஸ், கட்டாயம் வேண்டும் அந்த வேலைகளை முதலில் செய்யுமாறு லோகேஷுக்கு ஆர்டர் போட்டுள்ளது.

இது ஒரு புறம் இருக்க சன் பிக்சர்ஸ் அமீர்கான் மற்றும் நாகார்ஜுனாவிற்கு இமெயில் ஒன்றையும் அனுப்பியுள்ளது. படத்தைப் பற்றி எந்த விஷயத்தையும் வெளியே சொல்ல வேண்டாம். மிகவும் சீக்ரெட் ஆக வைத்துக் கொள்ளுங்கள் என செய்தி அனுப்பி உள்ளது. அவர்கள் கொடுக்கும் பேட்டியில் படத்தைப் பற்றி அதிகமாக பேசி வருகிறார்கள். முதல் கட்டமாக அதை நிறுத்தி உள்ளது சன் பிக்சர்ஸ்.