கடந்த ஒரு வாரமாக சமூக வலைதளத்தில் பேசு பொருளாக இருப்பது நடிகர் ஸ்ரீ தான். சமீபத்தில் ஸ்ரீ வெளியிட்ட ஒரு வீடியோ பதிவில் மனநோயாளி போல் காட்சியளிக்கிறார். அவருக்கு என்ன பிரச்சனை என பல்வேறு தரப்பில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.
அவரது குடும்பத்தினரும், நெருக்கமானவர்களும் இப்பொழுது அவரை தேடி கண்டுபிடித்து உள்ளனர். தற்போது டெல்லியின் உள்ள கூர்கான் பகுதியில் ஸ்ரீ இருக்கிறாராம். அவருக்கு என்ன பிரச்சனை, என்ன நடந்தது என்பது தெரியாமல் இஷ்டத்துக்கு சமூக வலைதளத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபுவை குற்றம் சாட்டி வருகிறார்கள்.
2017 ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் முதன் முதலாக இயக்கிய படம் மாநகரம். இந்த படத்தில் ஹீரோவாக நடித்தவர் ஸ்ரீராம் என்ற ஸ்ரீ. ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய கனா காணும் காலங்கள் மற்றும், பிக் பாஸ் முதலாவது சீசனில் பங்கு பெற்றவர் இந்த ஸ்ரீ. இதுவரை ஆறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது பண பிரச்சனையில் மாட்டிக் கொண்ட ஸ்ரீ போதை பொருளுக்கு அடிமையாகி விட்டார் என்றும், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவரை கண்டுக்கவில்லை என்றும் இஷ்டத்திற்கு குற்றம் சாட்டி வந்தனர்.இந்நிலையில் தான் அவரை லோகேஷ் கனகராஜ் மீட்டுக் கொண்டு வந்துள்ளார்.
தனது நண்பர்களை டெல்லிக்கு அனுப்பி கார் மூலம் அவரை அங்கிருந்து சென்னைக்கு வரவழைக்கச் செய்துள்ளார். ஏற்கனவே அவருக்கு எஸ் ஆர் பிரபு நிறுவனத்தில் கதை கேட்கும் வேலையில் பணியில் அமர்த்தியுள்ளார். அதற்காக அவருக்கு மாதம் ஒன்றரை லட்ச ரூபாய் சம்பளமும் கொடுக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட எட்டு வருடங்களாக இவர்களுக்குள் நல்ல நட்பு இருந்து வந்துள்ளது.