லோகேஷ் கனகராஜ்ஜை தூக்கி வைத்துக் கொண்டாடும் 3 சூப்பர் ஸ்டார்ஸ்.. முதல்முறையாக எதிர்த்து நிற்கும் ரட்சகன்

கூலி படம் முடிவதற்கு முன்னே படத்தின் ப்ரோமோஷன் வேலைகளை ஆரம்பித்து விட்டார்கள். இந்த படத்தில் நடித்திருக்கும் பாலிவுட் ஜாம்பவான் அமீர் கான் பேட்டி கொடுத்து வருகிறார். அங்கே அவர் இந்த படத்தை பற்றிய சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.

லோகேஷ் கனகராஜ் உடன் ஏற்பட்ட நட்பு காரணமாக அடுத்த ஒரு படத்தில் அவர் கூட நடிக்கவிருக்கிறார் அமீர்கான். இதை அவர் கொடிக்கும் பேட்டியில் அவரேகூறியுள்ளார். சூட்டிங் ஸ்பாட்டில் லோகேஷ், இயக்குனராக அவரை மிகவும் கவர்ந்து விட்டாராம். இதனால்தான் அடுத்த ப்ராஜெக்ட்டுக்கு எளிதில் சம்மதம் தெரிவித்துள்ளார்.

மாஸ்டர் மற்றும் கமலின் விக்ரம் இந்த இரண்டு படங்களையும் பார்த்து பிரமித்துள்ளார் அமீர்கான். இதையும் அந்த பேட்டியில் அவர் கூறியிருக்கிறார். அதுவும் போக இந்த படத்தில் நாகார்ஜுனா, ரஜினிக்கு முதன்முதலாக வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார்.

தான் நடித்த 90 படங்களில் இதுவரை எந்த ஒரு கதையிலும் அவர் வில்லனாக நடித்ததில்லை.முதன் முதலாக ரஜினிக்காகவும், லோகேஷ் காகவும் இந்த படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் வருகிறாராம். ஒரு பக்கம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த படத்தையும், லோகேஷ் கனகராஜையும் கொண்டாடி வருகிறார்.

சொன்ன நேரத்தில் எங்கும் தடையில்லாமல் படத்தை அட்டவணை போட்டு பக்காவாக கொண்டு செல்கிறார் லோகேஷ். இதனாலே ரஜினிக்கு அவரை ரொம்ப பிடித்து விட்டதாம். இந்த படம் ஆரம்பித்ததில் இருந்து கடைசி வரை விசில் பறக்கும் எனவும் நாகார்ஜுனா தான் கொடுத்த பேட்டியில் கூறி இருக்கிறார்.

thenmozhi

Thenmozhi

தேன்மொழி - கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான செய்திகளை எழுதி வருகிறார். OTT செய்திகள் மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.

View all posts →