மகாநதி: காவிரியின் சந்தோஷத்திற்கு ஆப்பு வைத்த விஜய்யின் பாட்டி.. அதிர்ச்சியில் சாரதா குடும்பம்

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், விஜய் கூட சேர்ந்து வாழ போகிறோம் என்ற சந்தோஷத்தில் காவிரி குஷிஆகிவிட்டார். அதனால் வீட்டுக்கு வரும் விஜய் எப்படி அம்மாவை சமாதானப்படுத்தி நம்மளே கூட்டிட்டு போவார் என்று யோசித்துப் பார்த்து தனக்கு தானே சிரித்துக் கொள்கிறார். காவேரியின் சிரிப்பு சத்தத்தை கேட்டதும் கங்கா மற்றும் சாரதா வந்து என்னாச்சு என்று கேட்கிறார்கள்.

அதற்கு பதில் சொல்ல முடியாமல் காவிரி சிரித்துக் கொண்டே இருப்பதால் அவர்கள் காவிரிக்கு என்னமோ ஆகிவிட்டது என்று சொல்லி போய் விடுகிறார்கள். அடுத்ததாக விஜய் காவிரி இருவரும் போனில் பேசிக்கொண்டு ஒன்றாக வாழப்போகும் நேரத்தை எண்ணி சந்தோசப்பட்டுக் கொள்கிறார்கள். இந்த சூழ்நிலையில் இதற்கெல்லாம் ஆப்பு வைக்கும் விதமாக விஜயின் பாட்டி கல்யாணி, ராதாவிடம் சொல்வது என்னவென்றால் காவிரி விஜய்க்கு வேண்டாம்.

காவிரி வந்த பிறகு தான் விஜய் வாழ்க்கையில் தேவையில்லாத பிரச்சினை வந்தது. காவிரி குடும்பத்தை பழிவாங்க வேண்டும் என்று பசுபதியும் ராகினியும் நம்ம குடும்பத்தை தேவையில்லாமல் கஷ்டப்படுத்தி விட்டார்கள். இதனால் அவர்களுடைய சகவாசம் எதுவுமே வேண்டாம். நான் காவிரியை பார்த்து விஜயை விட்டு விலகிவிடு என்று சொல்லப் போகிறேன் என்று கல்யாணி சொல்கிறார்.

உடனே ராதாவும் அப்படி என்றால் நான் காவேரி வீட்டிற்கு சென்று சாரதாவிடம் பேசிவிட்டு வருகிறேன் என்று சொல்லி முடிவெடுத்து விடுகிறார்கள். இது எதுவும் தெரியாமல் காவிரி, விஜய் வருவார் கூப்பிட்டு போவார் என்று கிளம்பிவிட்டார். காவிரியின் சந்தோஷத்தையும் செயல்களையும் பார்த்து சாரதா குழப்பத்தில் இருக்கிறார். விஜய்யும் சந்தோசமாக கிளம்பி நான் காவிரியை கூட்டிட்டு வருகிறேன் என்று தாத்தா பாட்டியிடம் சொல்கிறார்.

இதை கேட்டதும் பாட்டி அதிர்ச்சியாகி நிலையில் காவிரியே சந்தித்து பேச வேண்டும் என்று காவிரிக்கு போன் பண்ணி கோவிலுக்கு வர சொல்கிறார். வந்ததும் விஜய்யுடன் சேர்ந்து வாழ தயாராகி விட்டாயா என்று கேட்கிறார். அதற்கு காவேரி ஆமாம் என்று சொல்லிய நிலையில் விஜய்யின் பாட்டி அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நீ என் பேரனை விட்டு விலகி இரு, அதுதான் அவனுடைய சந்தோசத்துக்கும் நிம்மதிக்கும் நல்லது என்று சொல்கிறார்.

அதே மாதிரி விஜய்யின் சித்தி, சாரதா வீட்டுக்கு சென்று காவிரியை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். எங்க குடும்பத்துக்கு காவேரி வேண்டாம் என்று முடிவு பண்ணி விட்டோம். அதனால் உங்களாலும் உங்க மகளாலும் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று சொல்லிவிட்டு போய்விடுகிறார். இதைக் கேட்டு காவிரி குடும்பத்தில் இருப்பவர்கள் அதிர்ச்சியாகி விட்டார்கள்.

ஆனால் இவர்கள் யாருக்குமே காவிரி கர்ப்பம் என்ற விஷயம் தெரியவில்லை. அதனால் தான் ஒவ்வொருவரும் அவங்க இஷ்டப்படி நடந்து கொள்கிறார்கள். இதற்கெல்லாம் ஒரே தீர்வு காவேரி கர்ப்பம் என்ற விஷயம் வெளிவர வேண்டும். அப்பொழுதுதான் விஜய் காவிரிக்கு ஒரு விமோசனம் கிடைக்கும்.