பெற்றோர்களுக்கான படைப்பாக வந்த பறந்து போ.. ட்விட்டர் விமர்சனம் இதோ!

Paranthu Po Twitter Review : கற்றது தமிழ், தங்க மீன்கள் போன்ற படத்தை இயக்கிய ராமின் மற்றொரு படைப்பாக இன்று தியேட்டரில் வெளியாகி இருக்கிறது பறந்து போ. இந்தப் படத்தில் மிர்ச்சி சிவா, அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி ஆகியோர் நடித்திருக்கின்றனர். பெற்றோர்களுக்கான படமாக இந்த படம் வெளியாகி இருக்கிறது.

paranthu-po-review
paranthu-po-review

இயக்குனர் ராம் இதயபூர்வமாகவும் புத்துணர்ச்சி ஊட்டும் நகைச்சுவையுடன் திருப்பத்தை அளிக்கும் படத்தை கொடுத்திருக்கிறார். இன்றைய பெற்றோர்கள் பராமரிப்பு முறையில் என்னென்ன தவறுகள் நடக்கிறது என்பதை தெளிப்படையாக சொல்லாமல், எல்லாவற்றையும் சொல்லும் படமாக பறந்து போ அமைந்திருக்கிறது.

paranthu-po-review
paranthu-po-review

நடிகை அஞ்சலியின் கதாபாத்திரம் அழகாக கொண்டு செல்லப்பட்டுள்ளது. சிவாவின் சிறு வயது காதலியாக வந்துள்ளார். அதேபோல் சிவாவிற்கு ஜோடியாக நடித்துள்ள கிரேஸ் ஆண்டனியும் தனது சிறந்த நடிப்பை வெளிக்கொண்டு வந்திருக்கிறார்.

paranthu-po-review
paranthu-po-review

இயக்குனர் ராமிடமிருந்து இப்படி ஒரு படத்தை எதிர்பாக்கவில்லை. அட்டகாசம், இத்தனை இயல்பான நகைச்சுவையை ராம் இத்தனை நாள் எங்கே வைத்திருந்தார் என்றே தெரியவில்லை. சிவாவின் சிறந்த படங்களில் ஒன்று இப்படம். பறந்து போ இந்த வருடத்தில் நான் பார்த்த சிறந்த எண்டர்டெயினர்.

paranthu-po-review
paranthu-po-review

பறந்து போ படம் ஆரம்பம் முதல் முடிவு வரை ரொம்பவும் ஜாலியாக உள்ளது. ராம் மற்றும் சிவா இணைந்து பணியாற்றுவதை சந்தேகப்பவர்களில் ஒருவராக நான் மிகவும் தவறு செய்துவிட்டேன் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்‌.

paranthu-po-review
paranthu-po-review