OTT Movies: மே முதல் வாரம் ஓடிடியில் பெரிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. ஏனென்றால் திரையரங்குகளில் சூர்யாவின் ரெட்ரோ, சசிகுமாரின் டூரிஸ்ட் பேமிலி போன்ற படங்கள் வெளியாகிறது.
அதேபோல் தெலுங்கில் நானி நடிப்பில் உருவாகி இருக்கும் ஹிட் 3 படம் வெளியாகிறது. ஆகையால் ஓடிடியில் தமிழில் இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகிறது. சதாசிவம் சின்ராஜ் நடிப்பில் உருவான இஎம்ஐ படம் அமேசான் பிரைமில் வெளியாகிறது.
ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வருணன் என்ற படம் வெளியாகிறது. இதில் சரண்ராஜ், ராதாரவி போன்ற நடிகர்கள் நடித்திருந்தனர். மேலும் அமேசான் ப்ரைம் வீடியோவில் The Friend, Sacramento, Drop, Death Of Unicorn, BeingMaria ஆகிய படங்கள் ஸ்ட்ரீமாகிறது.
மே முதல் வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்
தெலுங்கில் ETvwin ஓடிடி தளத்தில் முத்தையா படம் வெளியாகிறது. மேலும் சோனி லைவில் மலையாள படமான புரோமன்ஸ் படம் ஸ்ட்ரீமாகிறது. மே 3ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரில் தி பிரவுன் ஹாட் படம் வெளியாகிறது.
மே நான்காம் தேதி ஸ்டார் வார்ஸ் ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் தி வாக்கிங் டெட் சீசன் 2 AMC+ ஓடிடி தளத்திலும் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. ஆகையால் இந்த மே விடுமுறையை கொண்டாட ஹாலிவுட் படங்கள் நிறைய வெளியாகிறது.
ஆனால் தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு படங்கள் ஓடிடியில் வெளியாகவில்லை. அது சற்று வருத்தத்தை ரசிகர்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் அடுத்த வாரம் பெரிய படங்கள் வர வாய்ப்பு இருக்கிறது.