தீயை விட சின்மயியின் குரலுக்கு இருக்கும் மவுசு.. Thuglife முத்தமழை செய்த சாதனை

தக் லைப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், பாடகி சின்மயி நேரில் பாடிய ‘முத்த மழை’ பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

முன்னதாக, இப்படத்தின் தமிழ் பாடலை பாடகி தீ எழுச்சியாக பாடியிருந்தாலும், விழாவில் சின்மயி குரலில் வந்த live version தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையடுத்து ரசிகர்கள், தீயை விட சின்மயியின் குரல் வரிகள் உணர்வோடும் மென்மையோடும் மனதை தீண்டுகிறது என பாராட்ட shower பண்ணி வருகின்றனர்.

இந்நிலையில், சின்மயி ஆழமாக உணர்வோடு பாடிய “முத்த மழை” பாடல் தற்போது உலகளவில் கவனம் ஈர்த்து வருகிறது.

உலக ட்ரெண்டிங் பாடல்களின் பட்டியலில் இது 10வது இடத்திலும், இந்திய அளவில் ட்ரெண்டாகும் பாடல்களில் 8வது இடத்திலும் இடம் பிடித்து பெரும் சாதனை புரிந்துள்ளது.

ரசிகர்கள் மற்றும் இசை பிரேமிகள் மத்தியில் இந்த பாடல் பெரும் வரவேற்பை பெற்று, இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →