இதனால்தான் நா.முத்துக்குமாருக்கும் எனக்கும் முட்டிகொண்டது.. மனம் திறந்த பிரபல இயக்குனர்

நா. முத்துக்குமார் : நா முத்துக்குமார் அவர்கள் சினிமாத்துறையில் இயக்குனராக பணிபுரிய ஆசைப்பட்டு, பாலு மகேந்திராவிடம் நான்கு வருடம் பணியாற்றி வந்தார். பிறகு சீமான் இயக்கத்தில்ஒரு பாடலை எழுதினார். பிறகு பாடல் வரிகள் மூலம் பிரபலமானவர்.

இவர் வாழ்ந்தது குறைந்த காலம் என்றாலும், அனைவர் மனதிலும் நீங்காத இடம் பெற்றுருக்கிறார். இவர் திரையுலகில் இருந்தது சிலகாலம் என்றாலும், அந்த சிலகாலமும் சினிமாவிற்க்கு பொற்காலம் என்றே கூறலாம்.

இதனால்தான் நா.முத்துக்குமாருக்கும் எனக்கும் முட்டிகொண்டது..

இவர் வாழ்நாளிலே இவர் கிட்டத்தட்ட 1500 பாடல்களை எழுதியுள்ளார். அது அத்தனை பாடலும் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த பாடல்கள். இவ்வாறாக இவர் எழுதி பிரபலமான ஒரு பாடல்தான் தங்கமீன்கள் படத்தில் உள்ள “ஆனந்த யாழை” பாடல் வரிகள் எழுதும் போது இயக்குனர் ராம் அவர்களுக்கும் நா முத்துக்குமார் அவர்களுக்கும் சண்டையாம்.

நா முத்துக்குமார் அவர்கள் இந்த பாடலை ஒரு காதல் பாடலாக எழுதியுள்ளார். ஆனால் ராம் அவர்கள் இதை தந்தை மகள் பாடலாக கேட்டுள்ளார். ஆனால் இப்படி எழுதினால் இந்த பாடல் உலகம் முழுவதும் ஹிட்டாகும் என கூறினார் நா முத்துக்குமார்.

நான் மீண்டும் எனக்கு இந்த படத்திற்கு இவ்வாறாகத்தான் பாடல் வேண்டும் எனக்கூறினேன். இதனால் முத்துக்குமாருக்கு மிகப்பெரிய மனவருத்தம் இருந்தது, அதற்கு பிறகு நேஷனல் அவார்டு கிடைத்ததும் தான், இந்த மனவருத்தம் போனது என்றும் தற்போது அளித்த நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார் இயக்குனர் ராம்.

நா முத்துக்குமார் அவர்களை மறக்கமுடியாமல் இன்னும் இந்த திரையுலகம் தவித்து கொண்டிருக்கிறது. அவரது பாடல் வரிகள் மூலம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றேதான் கூறவேண்டும்.