குபேரா போல, கூலியை கவிழ்க்க நினைத்த நாகர்ஜூனா.. ஒருவேளை நடந்திருமோ

Nagarjuna : நடிகர் நாகர்ஜூனா தெலுங்கு சினிமாவில் மட்டுமல்ல, தமிழ் சினிமாவிலும் பிரபலமான நடிகர். இவர் அன்றிலுந்து இன்று வரை அதே இளமை தோற்றத்துடன் சுற்றுகிறார்.

இவர் நடித்து தற்போது வெளிவந்த குபேரா படம் PAN இந்திய படமாக வெளிவந்து மாபெரும் ஹிட் கொடுத்தது. ஆனால் இந்த வெற்றியை தமிழ்நாட்டில் தக்க வைக்க முடியவில்லை. தமிழ்நாட்டில் குபேரா ஒரு தோல்வி படம்.

குபேரா போல, கூலியை கவிழ்க்க நினைத்த நாகர்ஜூனா..

இந்த தோல்விக்கு பல காரணம் உள்ளன. ஆனால் குபேரா பட ப்ரோமோஷனில் நாகர்ஜூனா தற்பெருமை பேசுவது போல் பேசியிருப்பார்.நான்தான் இந்த படத்தின் ஹீரோ. இந்த படம் மாபெரும் வெற்றிபெரும் என கூறியிருப்பார். ஆனால் இந்த படம் தமிழில் பிளாப்.

இதே போல் நாகார்ஜூனா தற்போது நடந்த கூலி இசை வெளியீட்டு விழாவில் அவரது ரோலை பற்றி பெருமையாக பேசியிருக்கிறார். எனது ரோலை நான் சூப்பராக செய்துள்ளேன். கிட்டத்தட்ட ஹீரோ போல எனது ரோல் என கூறியுள்ளார். மீண்டும் தற்பெருமை பேசியுள்ளார் நாகர்ஜுனா.

இதனால் ஒருசிலர் இப்படி பேசி பேசித்தான் குபேராவை கவிழ்த்து விட்டுடீங்க. இப்போ கூலியையும் கவிழ்க்க பாக்கறீங்களா என பேசிக்கிறாங்களாம். சொல்ல முடியாது என்ன சம்பவம் பண்ண காத்திருக்காங்களோ? எதுவாக இருந்தாலும் படம் ரிலீஸ் ஆனாதான் தெரியும்.