மாதவன், நயன்தாராவால் தரை தட்டி நிற்கும் கப்பல்.. மேடியை நம்பி மோசம் போன லேடி

90களில் பல இளம்பெண்களின் தூக்கத்தை கெடுத்த மாதவன் மீண்டும் சினிமாவில் தனக்கு தகுந்த கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்த நடித்து வருகிறார். வருடத்திற்கு 5, 6 படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர். 2010 க்கு பின் வருடத்திற்கு ஒரு படங்கள் என்று நடித்து வந்தார். இப்பொழுது ஹிந்தி, தமிழ்,தெலுங்கு போன்ற மொழிகளில் பிஸியாக இருக்கிறார்.

வாழ்த்துக்கள், குரு என் ஆளு, எவனோ ஒருவன், ஆர்யா எனத் தொடர் தோல்விகளை கொடுத்த அவர் யாவரும் நலம், இறுதிச்சுற்று படங்கள் மூலம் சினிமாவில் இரண்டாவது இன்னிங்ஸில் மீண்டும் லைம் லைட்டுக்கு வந்தார். அதன் பிறகு இவர் நடித்த விக்ரம் வேதா படம் பெரிய டர்னிங் பாயிண்டாக அமைந்தது.

சைலன்ஸ், சைத்தான், ராக்கெட்டரி என இப்பொழுதும் தொடர்ந்து நடித்து வருகிறார். இதுபோக அதிர்ஷ்டசாலி என்ற தமிழ் படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படம் ரிலீஸிற்காக காத்துக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் இவர் நயன்தாராவுடன் காபி விளம்பரத்தில் நடித்திருந்தார்.

சமீபத்தில் நயன்தாரா மற்றும் மாதவன் இருவரும் சேர்ந்து நடித்த படம் டெஸ்ட். இயக்குனர் சசிகாந்த் இந்த படத்தை இயக்கியிருந்தார். இதனை இந்த மாதம் நான்காம் தேதி நெட்பிலிக்ஸ் நிறுவனம் வாங்கி ஓ டி டி யில் வெளியிட்டது. நயன்தாரா மற்றும் மாதவன் நடித்திருந்ததால் இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

55 கோடிகள் கொடுத்து நெட்பிலிக்ஸ் இந்த படத்தை வாங்கி இருந்தது. விளையாட்டை மையமாக வைத்து சஸ்பென்ஸ் திரில்லராக வெளிவந்த இந்த படம் 5 கோடிகள் கூட வசூலிக்க வில்லை. இவ்வளவு பெரிய தொகை கொடுத்து வாங்கியதால் நெட்பிலிக்ஸ் நிறுவனம் கரை தட்டி நிற்கும் கப்பலை போல தடுமாறி நிற்கிறது. மாதவன் கூட நடித்தால் நல்ல பிரேக் கிடைக்கும் என நம்பி நயன்தாராவும் மோசம் போய்விட்டார்.