மணிரத்னத்தின் தக் லைஃப் தடம் புரளுதா? நெட்பிளிக்ஸ் காட்டிய அதிரடி

Mani Ratnam : மணிரத்னம் இயக்கத்தில் கடந்த வியாழக்கிழமை தியேட்டரில் வெளியானது தக் லைஃப் படம். நாயகன் படத்திற்கு பிறகு பல வருடங்கள் கழித்து இந்த கூட்டணி இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு பிரம்மாண்டமாக இருந்தது. இதனாலையே ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தக் லைஃப் படம் தவறியது.

முதல் நாளே ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றதால் வசூலில் திணறி வருகிறது. அதுவும் தியேட்டரில் பல இருக்கைகள் வெறுச்சோடி காணப்படுகிறது. கமல், சிம்பு படத்திற்காக இப்படி ஒரு நிலைமை என்ற நிலை தான் இருக்கிறது.

மேலும் கடந்த வெள்ளிக்கிழமை காளி வெங்கட், சத்யராஜ் ஆகியோர் நடிப்பில் வெளியான மெட்ராஸ் மேட்னி படத்திற்கு அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இந்த சூழலில் இப்போது நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதிரடி முடிவு எடுத்திருக்கிறது.

தக் லைஃப் படத்தில் நெட்பிளிக்ஸ் எடுத்த முடிவு

அதாவது தக் லைஃப் படம் மக்கள் மத்தியில் இருந்த எதிர்பார்ப்பால் பல கோடி கொடுத்து இந்நிறுவனம் படத்தை வாங்கியது. அதோடு படம் வெளியான 8 வாரங்களுக்குப் பிறகுதான் ஓடிடியில் வெளியாகும் என்றும் திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது அது ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படக்குழு நெட்பிளிக்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையில் உள்ளனராம். ஏனென்றால் இப்போதே தியேட்டரில் ஆளில்லாத காரணத்தினால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு மிகுந்த நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் தக் லைஃப் ஸ்கிரீனை குறைத்துவிட்டு மெட்ராஸ் மேட்னி படத்திற்கு அதிக ஸ்கிரீன்கள் ஒதுக்கி வருகின்றனர்.

ஆகையால் தக் லைஃப் படத்தை ஒரு மாதத்திற்கு உள்ளாகவே ஓடிடியில் வெளியிட முடிவு செய்திருக்கின்றனர்‌. எனவே மிக விரைவில் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸை அறிவிக்க உள்ளனர். தியேட்டரிலேயே இந்த படத்தை பார்க்க விரும்பாத ரசிகர்கள் ஓடிடியில் பார்ப்பார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →