இயக்குனரா எப்போ வருவீங்க? எனக் கேட்ட பிரபலம்.. அதற்கு தனுஷ் கொடுத்த பதில் இதுதான்!

தமிழ் சினிமாவில் பன்முகத் திறமைகள் கொண்ட நடிகர்கள் மிக குறைவுதான். அந்த வரிசையில் நடிகர் தனுஷுக்கு முக்கிய இடமுண்டு. நடிகர், பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் என அனைத்திலும் கால்பதித்து வெற்றி கண்டார்.

சமீபகாலமாக தனுஷ் நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் அசுரன், கர்ணன் ஆகிய வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜின் ஜகமே தந்திரம் படம் வெளியாக உள்ளது.

தனுஷ் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் பவர் பாண்டி என்ற படத்தை எடுத்துள்ளார். இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான்.

அதனைத் தொடர்ந்து நான் ருத்ரன் என்ற படத்தை இயக்கி வந்தார். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வந்த இந்த படம் பைனான்ஸ் பிரச்சனையில் சிக்கி பாதியில் கைவிடப்பட்டு மீண்டும் அவ்வப்போது நினைத்த நேரத்தில் உருவாகி வருகிறது.

இந்நிலையில் இந்த படம் எப்போது வெளியாகும் என சமீபத்தில் தனுஷ் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. ஆனால் தனுஷ், அடுத்த மூன்று வருடங்களுக்கு நல்ல நல்ல திறமையான இயக்குனர்களின் படங்களில் நடிக்க இருப்பதால் தன்னுடைய இயக்கத்தை இப்போதைக்கு ஓரம் கட்டிவிட்டேன் என கூறியுள்ளார்.

naan-rudhran
naan-rudhran

நான் ருத்ரன் படத்தில் தனுஷ், நாகர்ஜுனா, அனு இமானுவேல், அதிதி ராவ் ஹைதாரி போன்ற பல நட்சத்திரங்கள் நடித்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட நான் ருத்ரன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகின.