Rajinikanth : நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தமிழ் சினிமாவில் மாபெரும் நடிகர். இவர் கைவசம் நிறைய படங்களை வைத்துள்ளார். இவர் நடித்து தற்போது வெளிவரவிருக்கும் கூலி படம் , வெளிவருவதற்கு முன்பே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இதுவே தமிழ் திரையுலகத்திற்கு மிக பெரும் பேரையும் புகழையும் தேடித்தந்துள்ளது. இதுவே ரஜினி அவர்களை சிம்மாசனத்தில் தூக்கி உட்கார வைத்தது போல அவ்வளவு பெருமையாக உள்ளது. ஆன்ல தலைவர் அதையெல்லாம் தலைக்கு கொண்டு செல்லவில்லை மிகவும் எளிமையாகவே நடந்துகொள்கிறார்.
இயக்குனர் நித்திலனை தற்போது ரஜினிஅவர்கள் சந்தித்து நித்திலன் இயக்கிய மகாராஜா படத்திற்காக பாராட்டியுள்ளார். தமிழில் நித்திலன் குரங்கு பொம்மை மற்றும் மகாராஜா படத்தை இயற்றியுள்ளார். இந்த இரண்டு படமுமே நல்ல வரவேற்பை பெற்றது.
அதுமட்டுமல்லாமல் மகாராஜா படத்தின் கதை முற்றிலும் யாருமே எதிர்பார்க்காத கதைக்களம் என்பதால் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்திற்காக சிறந்த ஆனந்த விகடன் விருதும் கிடைத்தது. இந்த படத்திற் பார்த்து சூப்பர் ஸ்டார் கூட புகழ்ந்துள்ளார்.
நித்திலன் சொன்ன அந்த ஒரு line-ல் அசந்து போன ரஜினி..
இவர்களின் சந்திப்பில் இவர் கதையிலிருந்து ஒரு வரியை கூறினாராம் நித்திலன். அந்த ஒரு வரியை கேட்டு கதையின் முழு கதையையும் கேற்றிருக்கிறார் நம் சூப்பர்ஸ்டார். கதை கேட்டுவிட்டு பாராட்டியுமுள்ளார். ஒரு வேலை இந்தக்கதையில் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த கதை முழுக்க முழுக்க மலையாளம் படம் போலவும், அது திரில்லர் கதையை மையமாக கொண்டும் இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன எனவும் பேசப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாம் குடும்ப வாழ்க்கையை மையமாகவும் கொண்டு இருப்பதற்கும் வாய்ப்புகள் அதிகம் என பேசப்படுகிறது,
நித்திலன் மற்றும் ரஜினிகாந்த் அவர்கள் இணைந்து நடிக்கும் படத்தின் முழு செய்திகளும் கூடிய விரைவில் அதிகாரபூர்வக செய்தியாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.