ஓவர் பில்டப்-பால் ஓடாமல் போன 2 படங்கள்.. பல கோடி நஷ்டம்

Cinema : எந்த திரைப்படம் திரையரங்குகளுக்கு வந்தாலும், மக்கள் தங்கள் பணி சுமையை குறைப்பதற்கும் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்ய வேண்டும் என்று தான் படம் பார்க்க செல்லுகின்றனர். ஆனால் ஒரு சில திரைப்படம் நம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதில்லை.

படத்தின் ஷூட்டிங் முடிந்த பிறகு, படம் தியேட்டரில் கூட வெளியாகி இருக்காது அதற்கு முன்பே பயங்கரமான பில்டப் கொடுப்பாங்க இயக்குனர்கள். படம் வெளியாகி அதற்குப் பின்பு தான் தெரியும் படம் சுத்தமாகவே நல்லா இல்லை. சில சமயத்தில் சின்ன பட்ஜெட்டில் படம் எடுக்கும் தயாரிப்பார்கள் மற்றும் இயக்குனர்களுக்கு கூட லாபம் கிட்டி விடுகிறது. ஆனால் பிரபலமாக திரைப்படம் எடுக்க முயற்சித்து, அதிக செலவு செய்யும் படங்கள் தான் ஓடாமல் இருக்கிறது.

பறந்து போ :

இந்தத் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியான படமாக இருக்கிறது. ஒரு சாதாரண டெலிவரி பாய்ஸ் எதிர்கொள்ளும் சமூக அவமதிப்பு, மரியாதை இழப்பு போன்றவற்றின் அடிப்படையில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. உண்மையிலேயே சிவா இந்த திரைப்படத்தில் தனது காமெடி நடிப்பை விடவும், ஒரு படி மேலே நடித்திருக்கிறார்.

படம் ஆரம்பிக்கும் போது எதிர்பார்ப்பை கொடுத்தது. இரண்டாம் பகுதியில் அந்த அளவுக்கு சுறுசுறுப்பு இல்லாமல் போய்விட்டது. படத்தில் வரும் டயலாக்ஸ் எல்லாமே பழைய டயலாக்கை காப்பி அடித்திருக்கிறார்கள் போன்ற விமர்சனங்கள் அதிகம் எழுந்துள்ளது. ஜூலை 4 வெளியான இத்திரைப்படம் வெறும் ₹5.83 கோடி மட்டுமே வசூல் செய்தது.

3BHK :

சரத்குமார், தேவயானி, சித்தார்த், மீதா ரகுநாத் போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்த இந்த திரைப்படம் பெரிய அளவு எதிர்பார்ப்புடன் ஜூலை 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. நடுத்தர குடும்ப வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது இத்திரைப்படம். வாடகை, கடன், சேமிப்பு இந்த சூழ்நிலையில் இருந்து அந்த குடும்பம் ஒற்றுமையுடன் எப்படி போராடி வருகிறது என்பதுதான் இந்த திரைப்படத்தின் முழு கதை.

பல வருடங்களுக்குப் பிறகு சரத்குமார், தேவயானி காம்போ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை கொடுத்தது. ஆனால் இந்த படம் ரசிர்களிடம் வரவேற்பு கொஞ்சம் கம்மி தான். சுமார் ₹30-40 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கிறது இத்திரைப்படம். பத்து நாளில் 3bhk திரைப்படம் ₹9.83 கோடி மட்டுமே வசூல் செய்தது.

இந்த ரெண்டு படங்களுமே வெளியாவதற்கு முன்னாடி ஓவர் பில்டப் கொடுத்தாங்க ஆனால் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் எதிர்பார்த்த அளவுக்கு படம் வசூல் செய்யவில்லை.இப்படி ஓவர் பில்டப் செய்து நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளனர் இதனை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்கிறது கோலிவுட் வட்டாரம்.