மரணத்திற்குப் பிறகும் அடங்காத ஆசை.. பிரபாஸின் பேண்டஸி ஹாரர் தி ராஜா சாப் டீசர் எப்படி இருக்கு.?

The Raja Saab Teaser: பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள தி ராஜா சாப் படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. மாருதி இயக்கத்தில் தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மேலும் சஞ்சய் தத், நிதி அகர்வால், மாளவிகா மோகனன், ரித்தி குமார், அனுபம் கெர் என பல பிரபலங்கள் இதில் நடித்துள்ளனர். ஃபேண்டஸி ஹாரர் பணியில் படம் எடுக்கப்பட்டுள்ளது.

பிரம்மாண்ட பட்ஜெட் என்பது டீசரை பார்க்கும்போதே தெரிகிறது. ஆரம்பத்திலேயே சந்திரமுகி பங்களா போல் ஒரு அரண்மனை காட்டப்படுகிறது.

தி ராஜா சாப் டீசர் எப்படி இருக்கு.?

அதில் இறந்து போன சஞ்சய் தத் ஆவியாக அந்த வீட்டையும் அங்கு இருக்கும் சொத்துக்களையும் வேறு யாரும் அனுபவிக்க முடியாத படி பாதுகாத்து வருகிறார். அங்கு வரும் பிரபாஸ் அண்ட் கோ பேயிடம் மாட்டிக் கொண்டு எப்படி தப்பிக்கிறார்கள் என்பதுதான் கதை.

அதை நகைச்சுவை கலந்து இயக்குனர் கொடுத்துள்ளார். ஹாரர் படங்களுக்கே உரிய மிரட்டல் பின்னணி இசையும், விஷுவல் காட்சிகளும் சிறப்பாக இருக்கிறது.

அதேபோல் பிரபாஸ் கலகலப்பான இளைஞனாக வருகிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு அவரை இப்படி ஒரு கேரக்டரில் பார்ப்பது ரசிகர்களுக்கும் சந்தோஷம் தான்.

அதே சமயம் அவருக்கு மாஸ் சண்டை காட்சிகளும் இருக்கிறது. ஹீரோயின்களுடன் சேட்டை செய்வதில் தொடங்கி பேயிடம் சிக்கிக்கொண்டு திண்டாடுவது என அவருடைய கேரக்டர் எப்படி இருக்கும் என்பது டீசரில் தெரிகிறது.

ஏற்கனவே படத்திற்கு எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் டீசர் அதை அதிகப்படுத்தி இருக்கிறது. வரும் டிசம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படம் நிச்சயம் சூப்பர் டூப்பர் ஹிட் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →