வலிமை ஆர்ஆர்ஆர் திரைப்படங்கள் வெளியாவதில் சிக்கல்.. அதிருப்தியில் ரசிகர்கள்

நாம் பார்த்து ரசிக்கும் சினிமாவில் டெக்னாலஜி எவ்வளவோ முன்னேறி வருகிறது. அன்றைய காலகட்டத்தில் தியேட்டரில் நாம் பார்த்த படத்திற்கும், இப்பொழுது நாம் பார்க்கும் படத்திற்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் உள்ளன.

அதாவது டிஜிட்டல் சினிமா, 3d என்று ஏகப்பட்ட புதுமைகளை இப்பொழுது நம்மால் பார்க்க முடிகிறது. அப்படி டிஜிட்டல் சினிமா என்ற பெயரில் நுழைந்த நிறுவனம் தான் கியூப். நல்ல குவாலிட்டியான படங்களை நாம் திரையரங்கில் பார்க்க வேண்டுமென்றால் அதற்கு ஏற்றவாறு ப்ரொஜெக்டர் தேவைப்படுகிறது.

இந்த கியூப் நிறுவனம் தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் படத் தயாரிப்பாளரிடம் பணம் பெற்றுக்கொண்டு அதற்கு தேவையான ப்ரொஜெக்டரை வழங்குகிறது. இதனால் தியேட்டரில் படத்துக்கான டிக்கெட் விலையும் ஏற்றப்பட்டது.

நடிகர், தயாரிப்பாளர், நடிகர் சங்க தலைவர் என்ற பொறுப்பில் இருந்த விஷால் இந்த விலை ஏற்றத்தை எதிர்த்து போராட்டம் நடத்தினார். தற்போது இந்த பிரச்சனை மீண்டும் எழுந்துள்ளது. வரும் ஜனவரி மாதத்தில் தயாரிப்பாளர் சங்கம் ஒன்றிணைந்து கியூபா நிறுவனத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டு உள்ளனர்.

இதனால் குறிப்பிட்ட தேதியில் வலிமை, ஆர் ஆர் ஆர் படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கோடிக்கணக்கில் பணத்தைப் போட்டு படம் எடுத்த தயாரிப்பாளர்கள் ஹீரோ, ஹீரோயினுக்கு என்று தனியாக நிறைய செலவும் செய்து வருகின்றனர் இப்படிப்பட்ட சூழலில் கியூபா நிறுவனம் அதிக கட்டணம் வசூலிப்பது அவர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தான் தயாரிப்பாளர்கள் இணைந்து இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளனர். வலிமை படத்தை திரையில் காண்பதற்காக அஜித்தின் ரசிகர்கள் பல வருடங்களாக காத்திருக்கின்றனர். மேலும் இயக்குனர் ராஜமௌலியின் இயக்கத்தில் உருவான ஆர் ஆர் ஆர் திரைப்படமும் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது.

தற்போது ஏற்பட்டுள்ள சிக்கலால் படத்தை வெளியிட காத்திருக்கும் அனைவரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். இதற்கு காரணமான கியூபா நிறுவனம் விரைந்து பிரச்சனையை சரிசெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.