சென்சாரை மீறிய ஓடிடி.. கோர்ட்டின் அதிரடி உத்தரவு

OTT : சமீபகாலமாக ஓடிடியில் படம் பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது. ஏனென்றால் படம் வெளியான ஒரு மாதத்திற்கு உள்ளாகவே ஓடிடியில் வந்துவிடுகிறது.

இது ஒரு புறம் இருக்க அடித்து பிடித்துக் கொண்டு தியேட்டரில் சென்று அங்கும் கூட்ட நெரிசலில் படம் பார்க்க வேண்டி இருக்கிறது. அதற்கு நிதானமாக வீட்டிலேயே படத்தை பார்த்து விடலாம் என்ற நினைப்பு தான் அதிகம்.

ஆனால் ஓடிடியில் என்ன பிரச்சனை என்றால் சென்சருக்கு தடை இல்லை. எல்லை மீறிய காட்சிகள் திரைப்படங்களிலும் சரி வெப் சீரிஸ்களிலும் வெளியாகிறது. இதை பார்க்கும் குழந்தைகளின் மனது பெரிய அளவில் பாதிக்கிறது.

ஓடிடி தளங்களுக்கு ஏற்பட்ட சிக்கல்

படங்களில் இல்லாத கட்டுப்பாடு ஓடிடியில் இருப்பதால் பெரும்பாலானோர் அதை பார்க்கவும் விரும்புகின்றனர். இதற்காக பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்ட நிலையில் விசாரணைக்கு வந்தது. இதை விசாரிச்ச உச்சநீதிமன்றம் ஓடிடி, இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் இதற்கு விளக்கம் கொடுக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

ஆனால் அவர்கள் தரப்பில் இருந்து தங்களது கருத்துக்களை எதார்த்தமாக சொல்ல வேண்டும் என்றால் இது போன்ற சில காட்சிகள் தேவைப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் உண்மையான சம்பவங்களை எடுக்கும்போது பெண்கள் எவ்வாறு சித்தரிக்கப்பட்டார்கள் என்பதை காண்பிக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது.

அதனால் தான் இவ்வாறு காட்சிகள் வருவதாக கூறியிருக்கின்றனர். ஆனால் இது போன்ற மோசமான காட்சிகள் யூடியூப், இன்ஸ்டாகிராம் மற்றும் ஓடிடி போன்ற சமூக வலைதள பக்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று மக்களிடத்திலிருந்து கோரிக்கை வந்துள்ளது.