ரஜினி சாரை பார்த்து பணத்தை மதிக்கல.. OPEN TALK கொடுத்த இலங்கைத்தமிழ் பேசும் நடிகர்

Sasikumar : நடிகர் சசிகுமார் அவர்கள் தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருந்து நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த டூரிஸ்ட் பேமிலி படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அது மட்டுமல்லாமல் இவர் இயக்கத்தில் வெளியான நிறைய படங்கள் நல்ல கதைக்களமாக அமைந்து சசிகுமாரை நல்ல இயக்குனராகவும் தமிழ் திரையுலகத்திற்கு தெரியப்படுத்தியது.

இவர் இயக்கத்தில் வெளியான வெற்றிவேல், சுப்ரமணியபுரம், நாடோடிகள், போராளி போன்ற நிறைய கருத்துள்ள படங்கள் மக்களை ஏற்றுக்கொள்ளப்பட்டது. சசிக்குமார் படம் என்றாலே நல்ல கருத்து இருக்கும் என்கிற அளவுக்கு கதைகளை தேர்ந்தெடுக்க கூடிய ஒரு நபர்.

இவர் தற்போது அளித்த நேர்காணல் ஒன்றில் பணம் பற்றிய சில கருத்துக்களை வெளிஅடையாக பேசியுள்ளார். அதாவது நான் பணத்தை பெரிதாக நினைத்ததில்லை. பணத்தை பெரிதாகவும் மதிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

ரஜினி சாரை பார்த்து பணத்தை மதிக்கல..

பிறகு ரஜினிகாந்த் அவர்களின் தளபதி படத்தில் ஒரு காட்சியில், ரஜினிகாந்த் இரத்தத்தை கொடுத்துவிட்டு, பணம் கொடுக்கும் போது அவங்க நன்றி ரோஷன் ஒடனே வெறும் பணம்தானே என்று சொல்லுவார். அதையெல்லாம் பார்த்து விட்டு இன்ஃப்ளுயன்ஸ் ஆகி, இது போன்ற சில படங்களும் நம்மை இன்ஃப்ளுயன்ஸ் பண்ணும்.

இதையெல்லாம் பார்த்து விட்டு நாங்க பணத்த பெருசா மதிக்கல. ஆனால் 40 வருஷம் அந்த பணம் என்ன மதிக்காம இருக்கியா என்று இன்று அதை மதிக்க வைத்திருகிறது. இதுதான் பணத்தோட குணம் என்றும் தன அனுபத்தின் மூலம் கிடைத்த பாடங்களை பகிர்ந்துள்ளார் நடிகரும் இயக்குனருமான சசிகுமார்.