1. Home
  2. கோலிவுட்

சிகரெட், மது மட்டுமல்ல அந்தரங்க விஷயத்திலும் ஆடி அடங்கிய ரஜினி.. 42 வருஷத்துக்கு முன்னாடி கூறிய ரகசியம்

சிகரெட், மது மட்டுமல்ல அந்தரங்க விஷயத்திலும் ஆடி அடங்கிய ரஜினி.. 42 வருஷத்துக்கு முன்னாடி கூறிய ரகசியம்
42 வருடத்திற்கு முன்பு அந்தரங்க விஷயத்தை பற்றி வெளிப்படையாக பேசிய ரஜினி.

Rajini Controversy: 72 வயதிலும் நான்தான் சூப்பர் ஸ்டார் என்பதை நிரூபித்து காட்டும் விதமாக ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் தரமான சம்பவத்தை செய்திருக்கிறார். இந்த படத்தின் வசூல் 500 கோடியைக் கடந்து உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் சக்கை கொடுக்க போட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் ரஜினி சமீப காலமாகவே தன்னுடைய ரசிகர்களுக்கு கையெடுத்து கும்பிட்டு அறிவுரை சொல்லி வருகிறார். ஏனென்றால் அவர் இந்த 40 வருடத்திற்கு முன்பு ஆடிய ஆட்டம் கொஞ்சம் நஞ்சமல்ல. அதனால்தான் தன்னுடைய ரசிகர்களிடம் சிகரெட் பழக்கம் மது, அருந்தும் பழக்கம் இருந்தால் விட்டு விடுங்கள் என்று கையெடுத்து கும்பிட்டு வேண்டி கேட்கிறார்.

ரஜினி சினிமாவில் வளர்ந்து உச்ச நடிகரான சமயத்தில் மதுவுக்கு அடிமையானது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் அவர் பெண்கள் விஷயத்திலும் கொஞ்சம் வீக்கானவர் என்பதை, அவர் 42 வருடத்திற்கு முன்பு ஓப்பனாக பேசிய விஷயம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது.

இப்போது வேண்டுமானால் சாமியார் போல் வாழ்ந்து கொண்டிருக்கலாம், ஆனால் ரஜினி 1981ல் சத்யராஜ் நடிப்பில் வெளியான சாவி படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியின் போது அளித்த பேட்டியில் அந்தரங்க விஷயத்தை பற்றி காது கூசும் அளவுக்கு பேசியிருக்கிறார்.

அந்தரங்கம் என்பது பரம சுகம், அதைவிட ஆனந்தமான விஷயம் வேறு எதுவும் இல்லை. வெறுத்து ஒதுக்கும் அளவுக்கு இது தவறான விஷயமும் இல்லை. ஆனால் சோசியல் சர்வீஸ் செய்பவர்களுக்கு இது இடைஞ்சல் அவ்வளவுதான். ஒரு காலத்தில் பெண் இல்லாமல் தூங்கவே முடியாது என்கின்ற நிலையும் இருந்தது.

இப்போது அது குறைந்து விட்டது, எதிர்காலத்தில் எப்படி இருக்குமோ? என்று அந்தரங்க விஷயத்தை பற்றி வெளிப்படையாக மேடையில் பேசினார். இவருடைய இந்த பேச்சைக் கேட்கும்போது சிகரெட், மது மட்டுமல்ல அந்தரங்க விஷயத்திலும் ஆடி அடங்கிய பிறகுதான் இப்போது ஆன்மீகவாதியாக மாறி கொண்டிருக்கிறார் .

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.