விஜய்யும் ரஜினியும் ஒரே தராசில்.. ஈடு கொடுக்குமா சன் பிக்சர்ஸ்

Sun pictures : சன் பிக்சர்ஸ் நிறுவனம் நிறைய திரைப்படங்களை தயாரித்து வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்ட படங்களில் பெரும்பாலான படங்கள் மிகப் பெரும் வெற்றியை பெற்று தந்திருக்கின்றன.

அதுமட்டுமல்லாமல் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒரு படத்தை தயாரிக்கிறது என்றாலே மிகப்பெரிய எதிர்பார்க்கும் மக்களிடையே இருக்கும். நல்ல ஹீரோ நல்ல கதை என அனைத்துமே கச்சிதமாக பொருந்தி இருக்கும் என்பது மக்களின் கருத்து. அதேபோல் தரமான படங்களை நிறைய கொடுத்திருக்கின்றன.

விஜய்யும் ரஜினியும் ஒரே தராசில்..

தற்போது உச்சத்தில் இருக்கும் விஜய்யும் ரஜினியையும் ஒரே தராசில் பொருத்தி அழகு பார்த்திருக்கிறது அமேசான் ப்ரைம். இதற்க்கு ஈடு கொடுக்குமா சன் பிக்சர்ஸ்-ன் கூலி மற்றும் வசூலை அள்ளி குவிக்குமா ஜனநாயகன் பார்க்கலாம்.ஆமாம் நடிகர் விஜய் அவர்களின் கடைசி படமான ஜனநாயகன் படம் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் கூலி படமும் தற்போது வெளிவர காத்துக் கொண்டிருக்கிறது.

இந்த இரண்டு படங்களுக்குமே திரைக்கு வருவதற்கு முன்பே எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது காரணம் விஜய்க்கு இதுதான் கடைசி படம் என்பதாலும், கூலி படத்தின் அப்டேட் மிகப்பெரும் வரவேற்பை பெற்று எதிர்பார்ப்பையும் அதிகரித்து உள்ளது.

தற்போது இந்த இரண்டு படங்களுமே சமீபத்தில் அதிக அளவில் டிஜிட்டல் உரிமம் விற்பனையாகியுள்ளன. இந்த இரண்டு படங்களுமே ஏற்கனவே சாதித்து விட்டது. இனி வெளிவந்ததற்குப் பிறகு இன்னும் எத்தனை சாதனைகள் தான் செய்யப் போகிறதோ இந்த இரண்டு படங்களும்.

தற்போது வெளிவந்திருக்கும் அப்டேட் என்னவென்றால் அமேசான் ப்ரைம் இந்த இரண்டு படத்தையும் 125 கோடிக்கு வாங்கி உள்ளது. அடுத்தடுத்தாக இந்த இரண்டு படமும் ரசிகர்களின் மத்தியில் பெரிய பரபரப்பையும் பெரிய வரவேற்பையும் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.