Rajinikanth : நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தமிழ் திரை உலகில் மிகப்பெரும் உச்சத்தில் இருக்கக்கூடிய நடிகர். எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் என்றுமே எளிமையாக நடந்து கொள்ளக் கூடிய ஒரு மாமனிதர். இப்படி பேச்சில் என்றுமே ஒரு தலைக்கனம் தெரிந்ததில்லை.
இவர் அரசியலுக்கு வருவதாக இருந்து, பிறகு அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவிப்பை கொடுத்தார். அதற்கு பிறகு நிறைய வெற்றி படங்களை கொடுத்து இன்று புகழ் மட்டுமல்ல வசூலின் உச்சத்திலும் இருந்து வருகிறார் ரஜினிகாந்த்.
அப்துல் கலாம், விவேக் கனவை கையில் எடுத்த சூப்பர் ஸ்டார்..
தற்போது லதா ரஜினிகாந்த் அவர்கள் அளித்த பேட்டி ஒன்றில் ரஜினிகாந்த் அவர்களின் 50 ஆண்டுகால திரை பயணத்தை கொண்டாடும் வகையில் ஒரு ப்ராஜெக்ட் ஒன்றை எடுத்துள்ளோம். அதாவது ரஜினிகாந்த் பூமி ப்ராஜெக்ட் என்று ஒரு திட்டத்தை கையில் எடுத்து மரக்கன்றுகளை நட இருப்பதாக லதா ரஜினிகாந்த் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மறைமுகமாக ரஜினிகாந்த் அவர்கள் இந்த திட்டத்தை கையில் எடுத்திருப்பது அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் உள்ளது. தற்போது இருக்கும் காலகட்டத்தில் மரக்கன்றுகளை நடுவது என்பது வரவேற்க கூடிய ஒன்று. மேலும் லதா ரஜினிகாந்த் அவர்கள் மரக்கன்றுகளை நடை விரும்புவர்கள் எங்களிடம் விதைகளையும் செடிகளையும் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த மரக்கன்றுகளை நடுவது என்பது மறைந்த ஐயா அப்துல் கலாம் அவர்களின் கனவு, அதை அப்துல்கலாம் ஐயாவிற்கு பிறகு நகைச்சுவை நடிகர் விவேக் மரக்கன்றுகளை நடுவதை தான் உயிரோடு இருக்கும் வரை செய்து வந்தார். பிறகு விவேக் அவர்கள் மற்றும் அப்துல் கலாம் அவர்கள் மறைந்தது இன்று வரையில் மனதார ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாக இல்லை.
தற்போது இந்த திட்டத்தை ரஜினிகாந்த் மற்றும் லதா ரஜினிகாந்த் அவர்கள் கையில் எடுத்திருப்பது மிகவும் வரவேற்க கூடிய ஒன்று. மக்கள் தொகை பெருகிக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் காற்று மாசுபாடு, உலக வெப்பமயமாதல், மழைப்பொழிவின்மை என ஏகப்பட்ட பிரச்சனைகளை நாம் எதிர் கொள்கிறோம். தற்போது இந்த திட்டம் பூமித்தாயை குளிர்விக்கும் வகையில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.