Actor Ram Charan: தெலுங்கில் பிரபல நடிகராக இருக்கும் ராம் சரண் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பரிச்சயம் ஆனவர் தான். அவருடைய மஹதீரா படம் தமிழிலும் சக்கை போடு போட்டதை தொடர்ந்து ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
தற்போது ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வரும் இவருக்கு சமீபத்தில் தான் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் இவருடைய மனைவி நடிகை தமன்னாவுக்கு காஸ்ட்லி கிப்ட் ஒன்று பரிசளித்திருக்கும் விஷயம் இப்போது மீடியாவில் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது.
அதாவது ராம்சரண் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். அப்படி இவர் தன் அப்பா சிரஞ்சீவியை வைத்து தயாரித்த படம் தான் சைரா நரசிம்ம ரெட்டி. கடந்த 2019 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
அதில் தமன்னா சிரஞ்சீவியின் காதலியாக வருவார். இந்த படம் முடிவடைந்த சமயத்தில் ராம்சரணின் மனைவி உபாசனா தமன்னாவுக்கு உலகிலேயே ஐந்தாவது பெரிய வைரத்தை கொண்ட மோதிரத்தை பரிசாக கொடுத்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். மேலும் அதன் மதிப்பு கிட்டத்தட்ட 2 கோடியை தாண்டும்.
தன் மாமனாரின் காதலியாக நடித்த தமன்னாவுக்கு ராம் சரணின் மனைவி இவ்வளவு விலை உயர்ந்த பரிசை கொடுத்திருப்பது பலருக்கும் ஆச்சரியமாகத் தான் இருக்கிறது. ஆனால் அந்த படத்தில் தமன்னாவின் நடிப்பு பலரும் பாராட்டும் வகையில் இருந்ததாலேயே இப்படி ஒரு பரிசை அவர் கொடுத்தாராம்.
அந்த வகையில் தமன்னா அந்த மோதிரத்தை தன் விரலில் அணிந்து கொண்டு இருக்கும் படியான போட்டோவும் இப்போது வைரலாகி கொண்டிருக்கிறது. அதில் மில்க் பியூட்டியான தமன்னாவையே ஓரம் கட்டும் அளவுக்கு அந்த வைரம் ஜொலி ஜொலிக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு காஸ்ட்லியான வைரத்திற்கு தமன்னா சொந்தக்காரியாகி விட்டார் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமன்னாவுக்கு கிடைத்த காஸ்ட்லி பரிசு
