தனுஷ் தன் படத்திற்கு உருவாக்கிய 6 கோடி ரூபாய் செட்டை விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு தானமாய் கொடுத்துள்ளார் என்ற செய்தி காட்டு தீ போல் பரவி சமூக வலைதளத்தில் கடந்த இரண்டு நாட்களாக ட்ரெண்டாகி வருகிறது. ஆனால் உண்மையான நிலவரம் அது இல்லை என இப்பொழுது செய்திகள் வந்துள்ளது.
ஜனநாயகன் படம் பயனூரில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. அங்கே பெப்சிக்கு உரிமையான ஸ்டூடியோவில் தான் இந்த படம் எடுத்து வருகிறார்கள். இதனால் அதற்கு வாய்ப்பே இல்லை என செய்திகள் கிடைத்துள்ளது. பொதுவாக தமிழ் சினிமாவில் ஒரு படத்திற்கு போடப்பட்ட செட்டை இன்னொரு படத்திற்கு பயன்படுத்தும் பழக்கம் உண்டு.
தனுஷ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்த படம் ராயன். அந்த படத்திற்கு போடப்பட்ட செட்டை தான் இப்பொழுது வேறு ஒரு படத்திற்கு பயன்படுத்தி உள்ளனர். அது ஜனநாயகன் படம் தான் என்ற செய்தி பரவி தனுஷ் தன்னுடைய செட்டை விஜய்க்கு தானமாக கொடுத்துள்ளார் என வதந்திகள் வந்த வண்ணம் இருக்கிறது.
ராயன் படத்தை தயாரித்தது சன் பிக்சர்ஸ். இப்பொழுது அவர்கள் லோகேஷ் கனகராஜ் மற்றும் ரஜினி கூட்டணியில் தயாரித்துக் கொண்டிருக்கும் படம் கூலி . இந்த படத்திற்கு தான் ராயன் படத்திற்கு போடப்பட்ட செட்டை பயன்படுத்தி உள்ளனர்.
சுமார் 6 கோடி ரூபாயில் போடப்பட்ட அந்த செட்டை கூலி படத்திற்காக பல மாறுதல்கள் செய்து பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் சன் பிக்சர்ஸ் 6 கோடி ரூபாய் சேமித்துள்ளது. மேலும் அந்தத் தொகையை படத்தின் பிரமோஷனுக்காக பயன்படுத்தலாம் என திட்டம் போட்டு காய் நகர்த்தி வருகிறது.