அனிருத் மீது வந்த வெறுப்பு.. சாய் அபயங்கருக்கு குவியும் வாய்ப்பு

Sai Abhyankar : இசையமைப்பாளர் அனிருத்துக்கு தான் நடிகர்களின் பட வாய்ப்புகள் சமீபகாலமாக வந்து கொண்டிருந்தது. ஆனால் திடீரென சாய் அபயங்கர் அடுத்தடுத்து பெரிய பட்ஜெட் மற்றும் நடிகர்களின் படங்களில் இசையமைப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அந்த வகையில் சாய் அபயங்கரின் ஒரு படம் வெளியாவதற்கு முன்பே கிட்டத்தட்ட 8 படங்களுக்கு மேல் ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. ராகவா லாரன்ஸின் பென்ஸ், பிரதீப் ரங்கநாதனின் டூயூட் மற்றும் சூர்யாவின் கருப்பு ஆகிய படங்களுக்கு இசையமைக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் பல்டி, சிம்புவின் 49 ஆவது படம், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அட்லீ மற்றும் அல்லு அர்ஜுன் இணையும் படம், சிவகார்த்திகேயன் விநாயக் கூட்டணியில் உருவாகும் படம் மற்றும் கார்த்தியின் மார்ஷல் ஆகிய படங்கள் சாய் அபயங்கர் கைவசம் இருக்கிறது.

சாய் அபயங்கருக்கு பட வாய்ப்பு வருவதற்கான காரணம்

இவ்வாறு திடீரென முளைத்த சாய்க்கு பட வாய்ப்புகள் அதிகம் வர காரணம் அனிருத் மீது உள்ள வெறுப்பு தான் என்று பேசப்பட்டு வருகிறது. அனிருத் நிறைய படங்களில் கமிட்டாகுவதால் சில படங்களை ரிஜெக்ட் செய்கிறார்.

மேலும் சில படங்களில் சொன்ன தேதியில் பாடல் ரெடி பண்ணுவதில் தாமதம் காட்டி வருகிறார். இதனால் படத்தின் ரிலீஸ் தள்ளி போவதாக இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் குற்றச்சாட்டுகள் வைத்து வந்தனர். அதோடு அனிருத் பாடல்கள் வேறு ஹாலிவுட் படத்தில் இருந்து திருடப்படுவதாகவும் விமர்சனங்கள் வருகிறது.

மேலும் அனிருத் நன்கு வளர்ந்த இசையமைப்பாளர் என்பதால் அவரது சம்பளமும் பெரிய தொகையாக இருக்கிறது. ஆகையால் இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.